Skip to main content

நிலைமாறும் உலகில்...



சில சமயங்களில் என்னடா இது நிலையற்ற வாழ்க்கை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கையில் , இந்த நிலையற்ற வாழ்க்கை எங்கேயிருந்து ஆரம்பமானது என்று நினைவலைகள் ஓடியது....

என் நினைவுக்குத் தெரிந்த எங்கள் முதல் இடமாற்றம் விருத்தாசலத்திற்கு, நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது - திருச்சியிலிருந்து இடமாறினோம். கல்வி ஆண்டின் நடுவில் இந்த மாற்றம் வந்ததால், அப்பா முதலில் அங்கு சென்று அலுவலகத்திலேயே தங்கியிருந்து, நல்ல பள்ளிகள் இருக்கிறதா, இடையில் சேர்த்துக்கொள்வார்களா? என்று அறிய அங்கு சென்றார்கள். அப்பா ஒரு வேளாண்மை அதிகாரி - அரசு அலுவலர். பாத்திமா ஆங்கில பள்ளியில் உடனே சேரச்சொன்னதால், ஒரு ஜனவரி மாதத்தில் சேர்ந்தோம் - நான் 4ம் வகுப்பு என் தம்பி 2ம் வகுப்பு- ஆனால் உடனே வாடகைக்குவீடு கிடைக்கவில்லை, அதனால் சில நாட்கள் டாக்டர் தாத்தா(எங்க தாத்தாவின் மூன்றாவது தம்பி ) வீட்டில் தங்கியிருந்தோம், பிறகு திரு வி.க. நகரில் ஒரு வீட்டில் குடியேறினோம், அதன் பிறகு அந்த வீடு மிகத் தொலைவில் இருந்ததால் சில மாதங்களில் நவமணி நாடார் காலனியில் குடியேறினோம். 2 வருடங்கள் கழித்து அப்பாவிற்கு பண்ருட்டிக்கு வேலை மாற்றம் வந்தது, விருத்தாசலத்திலிருந்து பண்ருட்டி 1மணி நேர பயணம் என்பதால், அப்பா அங்கிருந்தே அலுவலகித்திற்கு தினமும் சென்று வந்து கொண்டிருந்தார்கள்.

பிறகு, அப்பாவிற்கு திரும்பவும் விருத்தாசலத்திலிருந்து திருச்சிக்கு வேலை இடமாற்றம் கிடைத்துவிட்டது, எங்கள் உயர் பள்ளி படிப்பிற்காக திருச்சிக்கு வேலை இடமாற்றம் வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார்கள், சற்று சீக்கிரமாகவே வந்துவிட்டது. ஒரு சமயம் சுனில் / சுரேஷ் போன்ற நண்பர்களை விட்டு செல்கிறோம் என்று மனதை அழுத்தினாலும், திருச்சிக்கு திரும்ப செல்கிறோம், பழைய நண்பர்கள் / இடங்களை பார்க்கலாம் என்று சற்றே குதூகலமாய் இருந்தது. இந்த இடமாற்றமும் கல்வியாண்டின் நடுவில் தான் வந்தது, சில மாதங்கள்   அப்பா அலுவலகத்திலும், லாட்ஜிலும் தங்கியிருந்தார்கள்.

அப்போது அப்பாவிற்கு திருச்சி உறையூரில் அலுவலகம் இருந்ததால், அருகில் குடியேறினோம். திருச்சியில் நல்ல பள்ளிகளில் 7-10ம் வகுப்புகளில் சேர்வது கடினம் என்று பிறகுதான் தெரியவந்தது. சில நல்ல பள்ளிகளில் 10 - 15ஆயிரம் ரூபாய் டொனேஷன் கேட்டார்கள். பின் பெரிய தாத்தாவிற்கு தெரிந்த ஒரு திரைப்படவிநியோகஸ்தர் சிபாரிசில் 500ரூபாய் டொனேஷன் கொடுத்து ஒரு பள்ளியில் சேர்ந்தோம் - "உங்கள் தாத்தா நினைத்தால் ஒரு ரூமே கட்டித் தரலாம் (அப்பொழுது அப்பள்ளியில் புது கட்டிடம் கட்டிக்கொண்டிருந்தார்கள் - எங்க(அம்மா வழி) தாத்தாதான் எங்க ஊரு ப்ரெசிடென்ட், எங்க ஊரில் ஒரு டுரிங் டாக்கீஸ், மில், கைத்தறி நெசவு என்று பல பிசினஸ்  வைத்திருந்தார் ), நீங்க என்ன வெறும் 500 ரூபாய் தான் தரீங்க, இதில் ஒரு ஃபேன் தான் வாங்க முடியும்" என்று தலைமை ஆசிரியர் சொன்னார்.

6 மாதங்களுக்குப் பிறகு TVS Tolgate-Circuit House அருகில் அரசு வீட்டு வசதி வாரியத்தில் வீடு கிடைத்தது. அதனால் உறையூரிலிருந்து TVSடோல்கேட்டுக்கு இடம்பெயர்ந்தோம். இங்கிருந்தபோது நாஙகள் முதல் டிவி வாங்கினோம்!, அப்பொழுது Cricket Reliance Cup நடந்துகொண்டிருந்தது .
அடுத்த 6 மாதத்தில் அப்பாவிற்கு தஞசாவூர் அருகில் ஏலாக்குறிச்சி என்ற ஊருக்கு இடமாற்றம் வந்தது. அப்போது நான் 10ம் வகுப்பு பயின்றதால் அப்பா நாங்கள் திருச்சியிலேயே இருக்குமாறு பார்த்துக்கொண்டார்கள்.

வேறு ஊருக்கு அலுவலகம் மாறியதால் அரசு குடியிருப்பிலிருந்து வெளியேற வேண்டும், அதனால் காஜாமலை-EB colonyக்கு இடம்பெயர்ந்தோம். இங்கிருந்த காலம் வசந்த காலம் - ஹை ஸ்கூல் பருவம்  , நிறைய பேர் வருவார்கள், நிறைய நண்பர்கள் இருந்தார்கள். பள்ளிச்செல்லும்போது பேருந்தில் படிக்கட்டுப் பயணம், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு  போட்டி போட்டுக்கொண்டு படியேறுவது - எனக்குத் தெரிந்து நான் 7 நிமிடங்களில் ஏறியுள்ளேன், தேர்வு நாட்களில் பேருந்து பயணத்தின்போது மனப்பாட பாடல்கள் ஒப்பிப்பது, மேலப்புதூர் நிறுத்தம் வந்தால் படிக்கு அருகில் நின்று கொள்வது..etc.,.

ஒரு வருடம் கழித்து அப்பாவிற்கு திரும்பவும் திருச்சிக்கு மாற்றம் கிடைத்தது, அதன் பின் அந்தநல்லூர், மணிகண்டம், மனப்பாறை போன்ற திருச்சிக்கு அருகில் உள்ள ஊர்களிலும் அப்பாவிற்கு பதவி உயர்வு + மாற்றம் வந்தது. நான் 12ம் வகுப்பு படிக்கும்போது ஓசூர் அருகிலிருக்கும் சூலகிரி என்ற ஊருக்கு அப்பாவிற்கு மாற்றம் வந்தது,even then we managed to stay in Trichy coz as me and my brother were in 12 and 10th stds. அந்த சமயங்களில் அப்பாவை விடியற்காலை 4 மணிக்கு பஸ் ஏற்றிவிட செல்வேன், பஸ் ஸ்டாண்டிலிருந்து திரும்ப வீடு வரும்போது ஸ்கூட்டரில் 100கிமீ speedல் வருவேன்(ofcourse..no traffic on the road at that time), அந்த துணிச்சல் இப்பொழுது இல்லை.

அப்பொழுது அப்பா 2வாரங்களுக்கு ஒரு முறை  திருச்சிக்கு வந்து செல்வார்கள். திரும்பவும் அப்பாவிற்கு திருச்சிக்கே இடமாற்றம் கிடைத்தது, நாங்கள் காலேஜ் சேர்ந்தபிறகு அப்பாவிற்கு அரியலூருக்கு பதவி உயர்வு + இடமாற்றம் வந்தது. Hereafter it doesn't make sense staying in Trichy so we shift our residence to Ariyalur.

2 வருடங்களுக்குப் பிறகு உளுந்தூர்பேட்டைக்கு இடமாற்றம் - வீட்டு சாமான் ஏற்றிச்செல்லும் லாரி பட்டை உடைந்து நள்ளிரவில் பெரம்பலூர் அருகே நின்றது தனிக்கதை. Meanwhile I completed my B.E. & I got my first job. Then back to square one, அப்பாவிற்கு மறுபடியும் திருச்சிக்கே இடமாற்றம் வந்தது. Appa managed to stay in Trichy itself till his retirement.

Nowadays its my(our) turn.. I moved to Chennai, later, I moved here to USA, and hereitself in the past 7 years I were in Detroit, Indianapolis, LA, Columbus, Atlanta, Pittsburgh, NYC.. and  keep going..
ம்.... எத்தனை இடமாற்றங்கள்...........

இந்த நாடோடிகளின் கால்கள் நிலையான வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஓடுகின்றன, ஆனால் இந்த வாழ்க்கைப்போட்டியில்  மாற்றம் இல்லாதது (இட)மாற்றங்களே  என்று அறிவுக்கு எட்டினாலும் மனம் ஏற்க மறுக்கிறது. 

Comments

Popular posts from this blog

திருத்தறசாமி !!!

 பொறியியல் இளங்கலை இறுதியாண்டு -இயந்திரவியல், 8வது செமஸ்டர், 66% எந்த அரியர்ஸும் இல்லை - all clear.  இன்னும்  3 மாதங்களில்  Engineer!. மாமாவிற்கு தெரிந்த நண்பர்கள் வேலை  செய்யும் கம்பெனிகளில் ஏறி இறங்கி கம்பெனி ப்ராஜெக்ட் எதுவும் கிடைக்காமல் நண்பன் சடாச்சரதிற்கு தெரிந்த திருநெல்வேலி நண்பனிடமிருந்து எடுத்து வந்த ஒரு ப்ராஜெக்டை சற்று வித்தியாசமாக மாற்றி பைனல் இயர் ப்ராஜெக்டை முடிக்க பாடுபட்டுக்கொண்டிருந்தோம். மண் துகள்களை கம்பரசரிலிருந்து வரும் காற்றில் சேர்த்து  ஒரு சிறிய நாசில் மூலமாக பீச்சியடித்து கண்ணாடி மற்றும் மைக்கா ஷீட்டுகளில் துளைபோடுவது - harnessing non-conventional sources of energy, அந்த சப்ஜெக்ட் எடுக்கும் லெக்சரர்தான் எங்கள் பிராஜெக்ட் கைடு .  1995 பிப்ரவரி மாதம், முதல் வாரம்  புதன்கிழமை மதிய இடைவேளையில் நண்பர்கள் இன்று 7th செமஸ்டர் ரிசல்ட் வருகிறது என்று  பேசிக்கொண்டிருந்தார்கள். 3.30 மணி வாக்கில் காலேஜ் முடியும் நேரத்தில் டிபார்ட்மென்ட் நோட்டிஸ் போர்டில் ரிசல்ட் வெ...

Panorama பக்கம்

Amateur புகைப்படக்காரர்களுக்கு iPhone சில வேலைகளை சுலபமாக்கியுள்ளது, அதில்அருமையான ஒன்று Panoramio, சாதாரண கண் காணும் காட்சியை விட அகலமாக படம் எடுப்பது. இது புகைப்படத்திற்கும் புதிய  பரிமாணத்தை அளிக்கும். காட்சியும் புது வடிவம் பெற்று விவரமான தோற்றத்தை கொடுக்கும். நான் கிளிக்கிய சில panoramic view படங்கள் இங்கே.

ஓ.. பக்கம்

2004 நவம்பரில் ksrk எனது தம்பி மூலமாக எனக்கு அறிமுகம் , அவர் எழுத்தாளரும்கூட என்று அறிமுகம் செய்தான் . சில வருடங்கள் கழித்து அவருடைய வலைப்பதிவுகள் / கதைகள் படித்தேன் . அவருடைய வெப்ஸைட்டில் அவரின் டிவிட்டர் ஐடியைப் பார்த்து சரி நாமும் ட்விட்டரில் ஒரு கணக்குத் தொடங்குவோம் எனத்தொடங்கி பின்தொடர்ந்தேன் .  பின் ட்விட்டர் ரெகமெண்ட் செய்ய @elavasam கொத்தனாரைப் பின்தொடர்ந்தேன் . அவர் ட்விட்டுகள் ஜாலியா இருந்தது . பின் அவர் ஜாலியா தமிழ் இலக்கணம்னு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்று தெரியவந்தது . பள்ளியில் தமிழ் பாடத்தில் பல சமயம் க்ளாஸ் ஃபர்ஸ்ட் எடுத்துள்ளேன் , புலவர் மன்றத்தேர்வில் பள்ளியில் முதலாக வந்து பரிசெல்லாம் வாங்கியுள்ளேன் . பள்ளிப்படிப்பு முடிந்ததும் 1991 னோட தமிழ் இலக்கணம் , இலக்கியம் எல்லாம் விட்டுப்போய் மறந்துபோச்சு .  பதினெட்டு வருசம் கழித்து தமிழ் இலக்கணம் அதுவும் ஜாலியா கத்துக்கலாம்னு சொல்லுறாரேன்னு ஒரு ஆர்வம் வந்துடுச்சி , ஆனால் எப்படி அந்த புத்தகத்தை வாங்குறதுன்னு தெரியல . அப்ப நி...