Skip to main content

Posts

Showing posts from August, 2012

A Bose is a Bose is a Bose.. Bose

அப்பொழுதெல்லாம் எங்க வீட்டில் கருப்பு Panasonic transistor radio-தான் home entertainment, அப்பா - அம்மா கல்யாணத்தின் போது வாங்கியது. காலையில் பக்தி பாடல்களில் ஆரம்பித்து, மாநில செய்திகள் - விவிதபாரதி என்று தொடர்ந்து, இரவு ஆகாசவானி /இலங்கை தமிழ் சேவை-2 / நாடகத்தில் முடியும். 1987ல் புதிய டேப்ரிகார்டர் வாங்கும்வரை அந்த சிறிய கருப்பு ரேடியோதான் home entertainment. டேப்ரிகார்டர் வந்தபிறகு TDK, JVC கேசட்டுகளில் விருப்பமான பாடல்களை பதிவு செய்து கேட்டது . அதன்பின் 1994ல் அரியலூரில் Philips 2-in-1. வேலையில் சேர்ந்தபிறகு முதல்  சம்பளத்தில் வாங்கிய sony walkman. 1997ல் அருணகிரி மாமா மூலமாக சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட AIWA VCD. 2001ல்  அமெரிக்காவிலிருந்து தம்பி அனுப்பிய sony cd walkman, பின் 2003ல் சென்னையிலிருந்து வாங்கிவந்த sony home theater. 2005 California-வில் mp3 player.  NJ-வில் 5-வருடங்களுக்கு முன் வாங்கிய Yamaha home theater என்று, இசையை  பல பரிமாணத்தில் கேட்டாலும், Bose speaker-ல் கேட்க வேண்டும் என்று கிட்டத்தட்ட 10 வரூடங்களாக கனவு - ஆசை - ஆர்வம்.  ஆனால் அதன் விலை