Skip to main content

Posts

Showing posts from November, 2013

ஹலால் புலால்

ஞாயிறு காலை, குளிர், எப்பொழுதும் போல் 6 மணிக்கே முழிப்பு வந்தாலும் குளிரில் காலையிலேயே எழுந்து என்ன செய்வது என்று தெரியாமல் iPad-ஐ  எடுத்து இமெயில் பார்த்து கூப்பனில்லாத இமெயில்களை ட்ராஷ் செய்துவிட்டு, மாலைமலரிலும், USA டுடேயிலும், ட்விட்டரிலும் கொஞ்சம் மேய்ந்துவிட்டு, கண்களைக் கொஞ்சம் டயர்டாக்கி இன்னைக்கு என்ன வேலையெல்லாம் செய்யலாம் என்று எண்ணியவாரே திரும்பவும் தூக்கத்தை வரவழைத்து ஒரு கோழித்தூக்கம் போட்டேன்.  மணி எட்டு, கதிரவன் காய்ந்தாலும் வேகமாகக் காற்றடித்துக்கொண்டிருந்ததால் குளிராக இருந்தது. அதனால் பார்க்குக்குச் சென்று ஒடும் எண்ணத்தை மாற்றிவிட்டு ஸ்மார்ட் டிவியை ஆன் செய்து YouTube-ல் விஜய் டிவி நிகழ்ச்சிகளை மேய்ந்தேன். ஒன்னும் பார்க்கும்படி மாட்டவில்லை. சரி குளியலையாவது முடிப்போம் என்று எழுந்தபோது மனைவி, "பையனோட ப்ராஜெக்ட் வொர்க்குக்கு சில படங்கள் தேவைப்படுது பிரின்ட் அவுட் எடுக்கனும்" என்றாள். வீட்டில் ஒன்றுக்கு இரண்டு பிரின்டர் இருந்தாலும், இரண்டிலுமே இங்க் தீர்ந்துவிட்டது, பிரின்டர் கேட்ரிட்ஜ் வாங்குவதற்குப்பதில் புது பிரின்டரே வாங்கிவிடலாம் என்று எண்ணி குழம்பி எத