Skip to main content

Posts

Showing posts from November, 2014

பச்சை நிறமே.. பச்சை நிறமே..

அமெரிக்காவில் காலடி வைத்து  சரியா பத்து வருசம் ஆச்சு. 2004 நவம்பர் 14 மாலை, டெட்ராய்ட் - மெக்நமாரா ஏர்போர்ட, flight 5மணி நேரம் லேட், காலையில் ப்ராங்ஃபர்ட்டில் சாப்பிட்ட சீஸ்-சாண்ட்விச்சும், மதியம் ஃப்ளைட்டில் கொடுத்த டர்க்கி சாண்ட்விச்சும் வயிற்றை என்னவோ செய்து கொண்டிருந்தது. சரியான தூக்கம் இல்லாததால் டயர்டாக இருந்தது. இமிக்ரேஷனில் என்ன கேட்கப்போகிறார்களோ என்று எண்ணிக்கொண்டே ஹான்ட் லக்கேஜை எடுத்துக்கொண்டு எல்லோரையும் பின் தொடர்ந்து ஏர்போர்ட்டின் உள்ளேயே அரை கிலோமீட்டர் நடந்த பிறகு செக்யூரிட்டி ஆபிசர்கள் அங்கிருந்த வெவ்வேறு இமிகிரேஷன் வரிசைகளில் நிற்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தனர்.  ஒரே சமயத்தில் நான்கு ஃப்ளைட் வந்திறங்கியதால் நல்ல கூட்டம், மேலும் பத்து கவுன்டர்கள் திறந்தனர், ஆறடிக்கும் மேலாக கனத்த உருவத்துடன் பலர் கருப்பு ஃபுல் வின்டர்கோட் அணிந்து முன்னே வரிசையில் நின்று கொண்டிருந்தனர்,  என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை, சற்றே மிரட்சியாக இருந்தது. என் முறை வந்தது, "உன் கம்பெனி பெயர் என்ன?", "நீ என்ன வேலை செய்ய போகிறாய்?" என்று இமிகிரேஷன் ஆபிசர்