Skip to main content

Posts

Showing posts from September, 2011

நிலைமாறும் உலகில்...

சில சமயங்களில் என்னடா இது நிலையற்ற வாழ்க்கை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கையில் , இந்த நிலையற்ற வாழ்க்கை எங்கேயிருந்து ஆரம்பமானது என்று நினைவலைகள் ஓடியது.... என் நினைவுக்குத் தெரிந்த எங்கள் முதல் இடமாற்றம் விருத்தாசலத்திற்கு, நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது  - திருச்சியிலிருந்து இடமாறினோம். கல்வி ஆண்டின் நடுவில் இந்த மாற்றம் வந்ததால், அப்பா முதலில் அங்கு சென்று அலுவலகத்திலேயே தங்கியிருந்து, நல்ல பள்ளிகள் இருக்கிறதா, இடையில் சேர்த்துக்கொள்வார்களா? என்று அறிய அங்கு சென்றார்கள். அப்பா ஒரு வேளாண்மை அதிகாரி - அரசு அலுவலர். பாத்திமா ஆங்கில பள்ளியில் உடனே சேரச்சொன்னதால், ஒரு ஜனவரி மாதத்தில் சேர்ந்தோம் - நான் 4ம் வகுப்பு என் தம்பி 2ம் வகுப்பு- ஆனால் உடனே வாடகைக்குவீடு கிடைக்கவில்லை, அதனால் சில நாட்கள் டாக்டர் தாத்தா(எங்க தாத்தாவின் மூன்றாவது தம்பி ) வீட்டில் தங்கியிருந்தோம், பிறகு திரு வி.க. நகரில் ஒரு வீட்டில் குடியேறினோம், அதன் பிறகு அந்த வீடு மிகத் தொலைவில் இருந்ததால் சில மாதங்களில் நவமணி நாடார் காலனியில் குடியேறினோம். 2 வருடங்கள் கழித்து அப்பாவிற்கு பண்ருட்டிக

தீபாவளி.. தீபாவளி..!

நியூயார்க் நகரம்   - உலகின் தியாகராய நகர்! எங்கும் எப்பொழுதும் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம் , விண்ணைத்தொடும் கட்டிடங்கள் நிறைந்த - பொழுது போக்கிற்கும், சுற்றுலாவிற்கும், பல வகையான உணவிற்கும்  பஞ்சமில்லாத, வரலாற்று சிறப்புகள் பல உள்ளடக்கிய தூங்கா நகரம். உலகவர்த்தகத்தின் தலைமையகம். இப்படி பல பில்டப்பு கொடுக்கலாம். சில வருடங்களுக்கு முன்னால் முதல்முறை நியூயார்க் போனபோது  அங்குள்ள ஒரு ஃப்ளாட்பார கடையில் நியூயார்க் ஸ்கைலைன் பேக்கிரவுண்டில் வானவேடிக்கை இருக்கும் ஒரு scenery  பார்த்தேன், நல்லாயிருக்கேன்னு ஒன்னு வாங்கி வந்தேன். அப்புறம்தான் தெரியவந்தது சுதந்திர தினத்தன்று இங்கு வானவேடிக்கை நடத்தி கொண்டாடுவர், அதிலும் நியுயார்க்கில் நடக்கும் Macy's fireworks மிகவும் பிரசித்தம் என்று கேள்விப்பட்டேன்.  இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு ஜூலை மாதத்தில் சிங்கப்பூரிலிருந்து என் சித்தப்பா அலுவல் நிமித்தமாகக் Connecticut வந்திருந்தார், Chemical Engineer ஒரு Pharma கம்பெனியில் வேலை பார்க்கிறார், Mystic -  Connecticutல் ஒரு Pharma கம்பெனி ஊத்தி மூடி எல்லாத்தையும் சிங்கப்பூருக்