Skip to main content

தீபாவளி.. தீபாவளி..!




நியூயார்க் நகரம்  - உலகின் தியாகராய நகர்! எங்கும் எப்பொழுதும் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம், விண்ணைத்தொடும் கட்டிடங்கள் நிறைந்த - பொழுது போக்கிற்கும், சுற்றுலாவிற்கும், பல வகையான உணவிற்கும்  பஞ்சமில்லாத, வரலாற்று சிறப்புகள் பல உள்ளடக்கிய தூங்கா நகரம். உலகவர்த்தகத்தின் தலைமையகம். இப்படி பல பில்டப்பு கொடுக்கலாம்.





சில வருடங்களுக்கு முன்னால் முதல்முறை நியூயார்க் போனபோது  அங்குள்ள ஒரு ஃப்ளாட்பார கடையில் நியூயார்க் ஸ்கைலைன் பேக்கிரவுண்டில் வானவேடிக்கை இருக்கும் ஒரு scenery  பார்த்தேன், நல்லாயிருக்கேன்னு ஒன்னு வாங்கி வந்தேன். அப்புறம்தான் தெரியவந்தது சுதந்திர தினத்தன்று இங்கு வானவேடிக்கை நடத்தி கொண்டாடுவர், அதிலும் நியுயார்க்கில் நடக்கும் Macy's fireworks மிகவும் பிரசித்தம் என்று கேள்விப்பட்டேன். 


இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு ஜூலை மாதத்தில் சிங்கப்பூரிலிருந்து என் சித்தப்பா அலுவல் நிமித்தமாகக் Connecticut வந்திருந்தார், Chemical Engineer ஒரு Pharma கம்பெனியில் வேலை பார்க்கிறார், Mystic - Connecticutல் ஒரு Pharma கம்பெனி ஊத்தி மூடி எல்லாத்தையும் சிங்கப்பூருக்கு ஜாகைய மாத்திடுச்சி, அது சம்பந்தமாக வந்திருந்தார். 

அவர் திரும்பி ஊருக்கு செல்லும்போது எங்கள் வீட்டிற்கு வந்திருக்கையில், நியூயார்க் போகவேண்டும் என்றார், அவரை அழைத்துக்கொண்டு நியூயார்க் Time Square மற்றும் Broadwayல் சில கடைகளில் ஏறி இறங்கினேன், பின் வீடு திரும்பும்போது Port Authorityயில் பஸ்ஸுக்காகக் காத்திருக்கையில் சுதந்திர தின வானவேடிக்கை நடப்பது தெரிந்தது, சில நிமிடங்களில் பஸ் வந்தது, ஏறி அமர்ந்தோம், Port Authority-யை விட்டு வெளியே வந்ததும் Lincoln Tunnelல் புகுந்தது, சில நிமிடங்களில் டனலைவிட்டு வெளிவந்ததும் Hudson river அருகே இருக்கும் ரேம்ப்பில் பஸ் ஏறியது - இங்கிருந்து பார்த்தால் நியூயார்க் skyline அழகாகத் தெரியும், அதிலும் இரவில் அதை காண கண் கோடி வேண்டும், ஜாக்பாட் அடித்தது போல் bus ஓட்டுனர் பஸ்ஸை பாலத்தின் மீது ஏறியதும் சாலையின் வலது  ஓரமாக உள்ள லேனில் நிறுத்திவிட்டார். அவ்வழியில் செல்லும் பெரும்பாலான வாகனங்களும் அவ்வாறே நிறுத்திவிட்டனர், 10 நிமிடம் மெய் மறந்து அந்த காட்சியைப் பார்த்தோம், பின் ஓட்டுனர் வண்டியை எடுத்ததும் அனைவரும் கைதட்டி நன்றி கூறினோம். சிங்கப்பூர் சித்தப்பாவிற்கும் அளவிலா மகிழ்ச்சி. மனதில் ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த சந்தோசம். 



அடுத்த வருடம் இங்கேயே இருந்தால் Hudson நதிக்கரையிலிருந்து இந்த வான வேடிக்கையை முழுவதுமாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். நினைத்தது போல் அடுத்த வருடமும் வந்தது அன்று வானிலையும் நன்றாக இருந்தது. இரவு 9.00 மணிக்கு முற்றிலும் இருட்டான பிறகு வான வேடிக்கை ஆரம்பிப்பர், வீட்டிலிருந்து Jersycity க்கு 12 மைல், 7 மணிக்கு கிளம்பினால் சரியாக இருக்கும் என்று Google mapல் எங்கே கார் பார்க் பண்ணலாம் என்று பார்த்துக்கொண்டிருந்தேன், பக்கத்து வீட்டிற்குப் புதிதாய் குடிவந்திடிருந்த தமிழ் நண்பர் "Newyork fireworks பார்க்க போறீங்களா நானும் வரேன்" என்று போன் பண்ணினார், பிறகு "நாங்க கிளம்ப நேரம் ஆகும் போலிருக்கு நீங்க கிளம்புங்க" என்றார். 

ஒரு வழியாக 7.40க்கு கிளம்பினேன், Jersycityயின் Hudson நதிக்கரையின் ஓரமாக செல்லும் சாலையில் எங்காவது நிறுத்தி பார்க்கலாம் என்று Jersycityஐ  
நெருங்குகையில், ஒரே திருவிழா கூட்டம், சாரை சாரையாக மக்கள் ஹட்சன் நதிக்கரையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர் , சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தன, ஒரு சிக்னலில் குறுக்காகக் Cop car லைட் போட்டு நின்றிருந்தது அங்கங்கே போலீசார்  ட்ராபிக்கை திருப்பிவிட்டுக் கொண்டிருந்தார். ஒருவழியாக  வேறு வழியை பிடித்து River roadஐ நெருங்கும்போது , River road செல்லும் அனைத்து சாலைகளும் அடைக்கபட்டிருந்தன. வாகனங்களுக்கு வழியில்லை நடந்து தான் செல்ல வேண்டும், காரை பார்க் பண்ண இடம் தேடிக்கொண்டிருக்கும்போதே வானவேடிக்கை ஆரம்பித்துவிட்டனர், ஒரு ஹோட்டலின் பார்க்கிங்கில் நிறுத்தி காருக்குள் இருந்தே அண்ணாந்து  பார்த்து விரக்தியுடன் வீட்டுக்கு திரும்பினோம். அதிர்ஷ்டம் இருந்தால் அடுத்த முறை முயற்ச்சிக்கலாம்
 என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.


அடுத்த வருடமும் வந்தது, இந்த முறை பெற்றோர்களும் இந்தியாவிலிருந்து வந்திருந்தனர், வானிலையும் நன்றாக இருந்தது. சென்ற முறைபோல் சொதப்பாமல் லோக்கல் டவுனில் fireworks பார்க்கலாமா என்று  சிறிது யோசித்தேன் . முயற்சி செய்து பார்ப்போம் என்று சற்று முன்னரே கிளம்பினோம்.


இந்த முறை 5.30 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி வேறுவழியில் River roadஐ பிடித்தேன், மணி 6.00 Wet Neywork நெருங்கிவிட்டோம், ஒவ்வொரு சிக்னலை தாண்டும்போது போலீசார் காரை  குறுக்கே நிறுத்திக்கொண்டிருந்தனர், ஸ்கைலைன் அருகே வந்துவிட்டோம், இதற்கு மேலே சென்றால் ரிஸ்க் என்று நினைத்து குருட்டாம்போக்கில் ஒரு லெப்ட் எடுத்தேன், நதிக்கரையோரம் உள்ள ஒரு அப்பார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ் அது, அதன் அருகே ஒரு சிறிய பிசினஸ் டிஸ்ட்ரிக்ட் அதன்  பார்க்கிங் லாட்டில் 20 நிமிடம் சுற்றி வந்தேன், தெய்வாதீனமாக ஒரு பெண் தன்னுடைய காரை 

வெளியே எடுத்தார். அடுத்த ஜாக்பாட்! அப்பாடி.. ஒருவழியாக காரை பார்க் செய்துவிட்டு  நதிக்கரையோரம் ஒரு பெஞ்சில் அமர்ந்தோம். பெரும்பாலோர் கையுடன் மடக்கும் நாற்காலி கொண்டுவந்திருந்தனர்,பலர் கையில் பீர் வைத்திருந்தனர், சிலர் ட்வின் டவர்சை பற்றி வருந்திக்கொண்டிருன்தனர் , மோட்டார் பைக்குகளில் போலீசார் வலம் வந்துகொண்டிருந்தனர், 

Helicopterகள் வானில் வளம்வந்துகொண்டிருந்தன, தீயணைப்பு போட்டுகள் சுற்றிவந்து கொண்டிருந்தன. பின் மூன்று சிறு கப்பல்கள் ஹட்சன் நதியின்  நியுயார்க் பக்கமாக வந்து நின்றன - அதிலிருந்துதான் வானவேடிக்கை நடத்துவர் -  நேரமாக நேரமாக  கூட்டம் கூடியது, சரியாக  9.30க்கு  வான வேடிக்கை ஆரம்பித்தது, நியுயார்க்  ஸ்கைலைன் பேக்கிரவுண்டில் 30 நிமிட வான வேடிக்கை! 3 வருட கனவு பலித்தது! கண்கொட்டாமல் பார்த்தேன். 

பின்னர் வீடு திரும்புகையில் 2 மணி நேரம் ட்ராபிக்கில் மாட்டி நள்ளிரவு 1 மணிக்கு வீடு திரும்பியது வேறு கதை. 



    

Comments

Popular posts from this blog

திருத்தறசாமி !!!

 பொறியியல் இளங்கலை இறுதியாண்டு -இயந்திரவியல், 8வது செமஸ்டர், 66% எந்த அரியர்ஸும் இல்லை - all clear.  இன்னும்  3 மாதங்களில்  Engineer!. மாமாவிற்கு தெரிந்த நண்பர்கள் வேலை  செய்யும் கம்பெனிகளில் ஏறி இறங்கி கம்பெனி ப்ராஜெக்ட் எதுவும் கிடைக்காமல் நண்பன் சடாச்சரதிற்கு தெரிந்த திருநெல்வேலி நண்பனிடமிருந்து எடுத்து வந்த ஒரு ப்ராஜெக்டை சற்று வித்தியாசமாக மாற்றி பைனல் இயர் ப்ராஜெக்டை முடிக்க பாடுபட்டுக்கொண்டிருந்தோம். மண் துகள்களை கம்பரசரிலிருந்து வரும் காற்றில் சேர்த்து  ஒரு சிறிய நாசில் மூலமாக பீச்சியடித்து கண்ணாடி மற்றும் மைக்கா ஷீட்டுகளில் துளைபோடுவது - harnessing non-conventional sources of energy, அந்த சப்ஜெக்ட் எடுக்கும் லெக்சரர்தான் எங்கள் பிராஜெக்ட் கைடு .  1995 பிப்ரவரி மாதம், முதல் வாரம்  புதன்கிழமை மதிய இடைவேளையில் நண்பர்கள் இன்று 7th செமஸ்டர் ரிசல்ட் வருகிறது என்று  பேசிக்கொண்டிருந்தார்கள். 3.30 மணி வாக்கில் காலேஜ் முடியும் நேரத்தில் டிபார்ட்மென்ட் நோட்டிஸ் போர்டில் ரிசல்ட் வெ...

Panorama பக்கம்

Amateur புகைப்படக்காரர்களுக்கு iPhone சில வேலைகளை சுலபமாக்கியுள்ளது, அதில்அருமையான ஒன்று Panoramio, சாதாரண கண் காணும் காட்சியை விட அகலமாக படம் எடுப்பது. இது புகைப்படத்திற்கும் புதிய  பரிமாணத்தை அளிக்கும். காட்சியும் புது வடிவம் பெற்று விவரமான தோற்றத்தை கொடுக்கும். நான் கிளிக்கிய சில panoramic view படங்கள் இங்கே.

ஓ.. பக்கம்

2004 நவம்பரில் ksrk எனது தம்பி மூலமாக எனக்கு அறிமுகம் , அவர் எழுத்தாளரும்கூட என்று அறிமுகம் செய்தான் . சில வருடங்கள் கழித்து அவருடைய வலைப்பதிவுகள் / கதைகள் படித்தேன் . அவருடைய வெப்ஸைட்டில் அவரின் டிவிட்டர் ஐடியைப் பார்த்து சரி நாமும் ட்விட்டரில் ஒரு கணக்குத் தொடங்குவோம் எனத்தொடங்கி பின்தொடர்ந்தேன் .  பின் ட்விட்டர் ரெகமெண்ட் செய்ய @elavasam கொத்தனாரைப் பின்தொடர்ந்தேன் . அவர் ட்விட்டுகள் ஜாலியா இருந்தது . பின் அவர் ஜாலியா தமிழ் இலக்கணம்னு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்று தெரியவந்தது . பள்ளியில் தமிழ் பாடத்தில் பல சமயம் க்ளாஸ் ஃபர்ஸ்ட் எடுத்துள்ளேன் , புலவர் மன்றத்தேர்வில் பள்ளியில் முதலாக வந்து பரிசெல்லாம் வாங்கியுள்ளேன் . பள்ளிப்படிப்பு முடிந்ததும் 1991 னோட தமிழ் இலக்கணம் , இலக்கியம் எல்லாம் விட்டுப்போய் மறந்துபோச்சு .  பதினெட்டு வருசம் கழித்து தமிழ் இலக்கணம் அதுவும் ஜாலியா கத்துக்கலாம்னு சொல்லுறாரேன்னு ஒரு ஆர்வம் வந்துடுச்சி , ஆனால் எப்படி அந்த புத்தகத்தை வாங்குறதுன்னு தெரியல . அப்ப நி...