Skip to main content

Posts

Showing posts from 2016

முடியுமா.. நடக்குமா..

இதுவரைக்கும் எந்த சினிமாப்படத்தையும் First Day First Showல்லாம் பார்த்ததில்லை, First Day Last Show வேணும்னா சிலமுறை பார்த்திருக்கேன், அதுவும் எங்க மாமா புண்ணியத்துல. எங்க தாத்தா - அம்மாவின் அப்பா - அவங்க கிராமத்தில் ஒரு தியேட்டர் வச்சிருந்தாங்க. காலேஜ் மற்றும் வேலை தேடிட்டிருந்த நாட்களில் பொங்கல், தீபாவளிக்கு ஊருக்குப் போகும்போது பெரிய நடிகர்கள் படம் ஏதாவது ரிலீஸ் ஆச்சுனா முதல்நாள் நைட் செகண்ட் ஷோ - First Day Last Show உறுதி. ஒரு சுமோவில் எத்தனைபேர் ஏற முடியுமோ அத்தனை கசின்ஸூடன் எங்க ஊரிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள கும்பகோணத்திற்குக் கிளம்பிடுவோம். மாமா தியேட்டர் ஓனர்ங்கிறதால அவங்க contacts வச்சி  எப்படியும் டிக்கெட் வாங்கிடுவாங்க.  தளபதி, பாண்டியன், பாட்ஷா, முத்து போன்ற ரஜினி படங்களெல்லாம் அப்படி பார்த்ததுதான். அதுக்கப்புறம் மெட்ராசுல வேலைன்னு செட்டிலானதுக்கப்புறம் படம் ரிலீசாகி ரெண்டு மூனு வாரம் கழிச்சு விகடன்ல விமர்சனம் ஓகேன்னா போய்ப்பார்ப்பேன். அமெரிக்கா வந்ததுக்கப்புறம் ரஜினி, கமல் & ஷங்கர் படங்கள் மட்டும் தியேட்டர்ல போய் பார்க்கிறதுன்னு ஒரு கொள்கை வச்சிருக்

காலங்காத்தால இம்சை பண்ணாத

Breakfast - முப்பது வயசு வரைக்கும் இட்லிதான் காலையில எனக்கு பிரதான உணவு. ஸ்கூல் படிக்கும் வரை தினமும் காலையில் சாப்பாட்டுத் தட்டில் இட்லி  - தமிழ் சினிமா ஹீரோ போல எப்பொழுதுமிருக்கும், சட்னி மட்டும்தான் தமிழ் சினிமா  ஹீரோயினி போல மாறும், சமயங்களில் சாம்பார் அல்லது இட்லிப்பொடி செகண்ட் ஹீரோயினா வரும். ஸ்கூலுக்கு கிளம்பும்போது அம்மா திட்டுவாங்களேன்னு கடமைக்கு ரெண்டு இட்லி, ரொம்ப முறைச்சா மூனு, அதுக்குமேல உள்ள இறங்காது, பஸ்ஸுக்கு லேட்டாச்சுன்னு சொல்லிட்டு எஸ்கேப். சிலசமயங்களில் சமையலறையிலிருந்து தோசை செகண்ட் ஹீரோவா வரும். உப்புமா, பொங்கல், பூரி அப்பப்ப காலையில் குணச்சித்திர ரோலில் எட்டிப்பார்க்கும். காலேஜ் சேர்ந்ததுக்கப்புறம் ஹாஸ்டல்வாசம். காலையில திட்டுறதுக்கு அம்மா இருக்கமாட்டாங்க, அதனால இட்லி/பொங்கல் போடுற பெரும்பாலான நாட்கள் காலையில விரதம்தான். வேலைக்கு போக ஆரம்பிச்சதும் திட்டுறதுக்கு யாரும் இல்லைனாலும் பசிக்குமே.. அதனால எந்த மெஸ்சுக்குள்ளயாவது நுழைஞ்சு அதே இட்லி.. இல்ல ஊத்தப்பம்.. இல்ல பூரி.. சில சமயம் அதுவும் கட். பேச்சுலர் லைஃப்ல பல நாட்கள் காலை உணவு என்பது இல்லாமலே போச்சு. 

வேண்டும்.. வேண்டும்.. வா!

சரவணன் & கார்த்தி  கார்த்திகேயன், என் கல்லூரி நண்பன், 2006 நவம்பர் 12ம் தேதி மாலை நான் Newark, NJ airportல வந்திறங்கினப்ப என்னைப் பார்க்க வந்தான். காஞ்சிபுரத்துல அவன் கல்யாணத்துல பார்த்தது, அதுக்கப்புறம் இப்பதான். காலேஜூல பார்த்த அதே கார்த்தி,  அவனிடம்  பெரிய மாற்றமில்லை. " எனக்கு New Jerseyல புது project கிடைச்சிருக்குடான்னு " சொன்னேன், " நீ அனுப்பிய emailல உன் client location பார்த்தேன், நான் South Jerseyல இருக்கேன்,  எனக்கு கொஞ்சம் தூரம் அது,  ஏர்போர்ட் எனக்கு பக்கம், அதனால்தான் இங்கேயே உன்னை பார்க்கலாம்னு வந்தேன் ". கொஞ்சநேரம் பேசிட்டு cabல ஏத்திவிட்டுட்டு " அப்புறம் call பண்ணுடா.. ஒரு weekend திரும்ப meet பண்ணுவோம் "னு சொல்லிட்டு கிளம்பிட்டான், அப்ப பார்த்ததோட சரி. அதுக்கப்புறம் அப்பப்ப போன்ல நலம் விசாரிச்சுப்போம். சில சமயம் familyயோட meet பண்ணலாம்னு plan பண்ணுனோம், ஒன்னு அவன் சொல்ற weekend நான் பிசியாயிருப்பேன், இல்லை நான் சொல்ற weekend அவன் பிசியாயிருப்பான். இப்படியே காலச்சக்கரம் பத்து வருசம் ஓடிடுச்சி. இத்தனைக்கும் ரெண்டு பேர் வீடும் 60மைல