Skip to main content

Posts

Showing posts from 2014

பச்சை நிறமே.. பச்சை நிறமே..

அமெரிக்காவில் காலடி வைத்து  சரியா பத்து வருசம் ஆச்சு. 2004 நவம்பர் 14 மாலை, டெட்ராய்ட் - மெக்நமாரா ஏர்போர்ட, flight 5மணி நேரம் லேட், காலையில் ப்ராங்ஃபர்ட்டில் சாப்பிட்ட சீஸ்-சாண்ட்விச்சும், மதியம் ஃப்ளைட்டில் கொடுத்த டர்க்கி சாண்ட்விச்சும் வயிற்றை என்னவோ செய்து கொண்டிருந்தது. சரியான தூக்கம் இல்லாததால் டயர்டாக இருந்தது. இமிக்ரேஷனில் என்ன கேட்கப்போகிறார்களோ என்று எண்ணிக்கொண்டே ஹான்ட் லக்கேஜை எடுத்துக்கொண்டு எல்லோரையும் பின் தொடர்ந்து ஏர்போர்ட்டின் உள்ளேயே அரை கிலோமீட்டர் நடந்த பிறகு செக்யூரிட்டி ஆபிசர்கள் அங்கிருந்த வெவ்வேறு இமிகிரேஷன் வரிசைகளில் நிற்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தனர்.  ஒரே சமயத்தில் நான்கு ஃப்ளைட் வந்திறங்கியதால் நல்ல கூட்டம், மேலும் பத்து கவுன்டர்கள் திறந்தனர், ஆறடிக்கும் மேலாக கனத்த உருவத்துடன் பலர் கருப்பு ஃபுல் வின்டர்கோட் அணிந்து முன்னே வரிசையில் நின்று கொண்டிருந்தனர்,  என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை, சற்றே மிரட்சியாக இருந்தது. என் முறை வந்தது, "உன் கம்பெனி பெயர் என்ன?", "நீ என்ன வேலை செய்ய போகிறாய்?" என்று இமிகிரேஷன் ஆபிசர்

Angry Bird

சில நாட்களுக்கு முன்பு அலுவல் முடிந்து வீட்டுக்குக் கிளம்பும்போது சக நண்பர் சையதுடன் பேசிக்கொண்டே கிளம்பினேன். மழை தூரிக்கொண்டிருந்தது, car parking-ல் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று அவர், "do you know how birds use  the camouflage?" என்றார். என்னடா ஏதோ சம்பந்தம் இல்லாமல் Discovery channel பக்கம் டாபிக்கை மாத்துறாரே என்று அவரை பார்த்தேன், அருகிலிருந்த car parking இடையே போடப்பட்டிருந்த கூழாங்கற்களை நோக்கிக் கையை நீட்டினார், ஒன்றும் தெரியவில்லை. அருகில் அழைத்துச்சென்றார், ஒரு பறவை உட்கார்ந்திருந்தது தெரிந்தது, எங்களைக் கண்டதும் பறக்கவில்லை, மாறாக கோபமாக சிலிர்த்தது. பின் அவரே விளக்கினார்,"it's hatching" என்று . மழை வலுத்ததாலும்,  மேலும் அங்கிருப்பது என்னவோ ஆஸ்பத்திரியில் அடுத்தவங்க  லேபர் ரூமை எட்டிப்பார்ப்பதுபோல் இருந்தது, அதை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமென்று காரை நோக்கி கிளம்பினேன். காரை ஸ்டார்ட் செய்து வீடு வரும்போது அதை பற்றிய சிந்தனை, கனத்த மழை பெய்தால் அது என்ன செய்யும், பறவைகள் பெரும்பாலும் மரத்தில்தானே கூடுகட்டி முட்டையிடும் இந்தப் பறவை ஏன் மனிதர்க

Panorama பக்கம்

Amateur புகைப்படக்காரர்களுக்கு iPhone சில வேலைகளை சுலபமாக்கியுள்ளது, அதில்அருமையான ஒன்று Panoramio, சாதாரண கண் காணும் காட்சியை விட அகலமாக படம் எடுப்பது. இது புகைப்படத்திற்கும் புதிய  பரிமாணத்தை அளிக்கும். காட்சியும் புது வடிவம் பெற்று விவரமான தோற்றத்தை கொடுக்கும். நான் கிளிக்கிய சில panoramic view படங்கள் இங்கே.