Skip to main content

Posts

Showing posts from 2015

கற்பது தமிழ்

என் பையனுக்கு  5 வயது ஆனதும் நியூஜெர்சியில் எங்கு தமிழ் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று தேட ஆரம்பித்தோம். முன்பே ஆரம்பித்திருக்கலாம் ஆனால் அப்பொழுதுதான் அவன் ஆங்கிலம் ஓரளவுக்கு எழுத பேசக்கற்றுக்கொண்டிருந்ததால் அவனைக் குழப்ப வேண்டாம் என்று விட்டுவிட்டோம். ஆண்டு விழா - தீபம்  Mahwah Temple, Pomona Temple-ல் சொல்லிக்கொடுக்கிறார்கள்  என்று ஆளாளுக்கு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்கள், அந்தந்த வலைதளத்தில்  பார்த்தால் உருப்படியாக ஒன்றும் இல்லை, சில இடங்களில் சமஸ்கிருதம், ஸ்லோகம் சொல்லித்தருவதாக நண்பர்கள் சொன்னார்கள் - இங்கே வசிக்கும் தமிழர்கள்  பலர் தங்கள் பிள்ளைகளை ஹிந்தி, சமஸ்கிருத பள்ளிகளில் சேர்க்க இருக்கும் ஆர்வம் தமிழின் மேல் இல்லை, மொழிக்கும் சாயம் பூசி  நிறத்துடன் பார்க்க ஆரம்பித்துவிட்டோம், அந்த அரசியலை அப்புறம் பார்ப்போம். TTS Picnic @ Picataway - Cricket இங்கிருந்து  இந்தியாவிற்கு - தமிழ் நாட்டிற்குச் சென்று வருபவர்களிடம் ஒன்றாம், இரண்டாம் வகுப்பு தமிழ் புத்தகத்தை வாங்கி வரச்சொல்லி சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தோம், நான்கைந்து வருடங்களாக அதையே சொல்லிக்கொண்டிருந்ததாலோ என்னவோ,  உய

இளவேனில் இது வைகாசி மாதம்...

என்கிட்ட இருக்கிறதுலேயே இருக்கிற ஒரு நல்ல கெட்டப்பழக்கம் எங்கேயாவது கேட்கிற பாட்டு பிடிச்சிருந்தா போதும், எப்படியாவது டவுன்லோடி என் பேவரிட் லிஸ்டுல சேர்த்திடனும். பாட்டு கேட்குறது எல்லாருக்குமே பிடிச்ச விஷயம்தான், ஆனா எனக்கு அது  ரொம்பரொம்பப்பிடிக்கும். அதுவும் நமக்குப்பிடிச்ச பாட்ட வரிசையா கம்பைல் பண்ணி கேட்கிறதே தனி ரசனைதான். ஒரு காலத்துல பயோடேட்டாவுல hobbiesனு போட்டு stamp  collection ,drawing, listening musicனு பாட்டு கேக்குறது வெறுமே hobbyயா தான் இருந்தது.  ஆனா கடந்த பத்து பதினைந்து வருஷமா அன்றாட வேலையோட வேலையா சேர்ந்துபோச்சு. அதுவும் ஆபீசுல இந்த Bose noice cancelling ஹெட்போனை காதுல மாட்டிகிட்டு கேட்குற சொகமே தனி.  எங்க அம்மா சொல்லுவாங்க, நான் குழந்தையாக இருக்கிறச்சே பக்கத்துல ரேடியோவ வச்சுட்டா சமத்தா அழாம பாட்டு கேட்டுக்கிட்டே படுத்திருப்பேனாம், அங்கேயிருந்துதான் ஆரம்பிச்சியிருக்கணும்.  சின்ன வயசுலலாம் எப்பயாச்சும் ரேடியோவுல பிடிச்ச பாட்டு போட்டா சத்தமா வச்சு கேட்டுக்கறதோட சரி, ரஜினியோட ரங்கா படத்துல ' பட்டுக்கோட்டை அம்மாளு 'ன்னு ஒரு பாட்டு வரும், அந்த பாட்ட சத்