Skip to main content

என்று தனியும் இந்த சுதந்திர தாகம்..

Band சத்தம் எங்கே கேட்டாலும் அப்படியே என்னை ஈர்க்கும், அதில் லயிச்சு அங்கேயே நின்றிடுவேன். இந்த band, March-pastற்கும் எனக்கும் சிறுவயதிலேயே சின்னத்தொடர்பு உண்டு.

சிறுவயதில் திருச்சி காஜாமலை காலனியில் இருக்கும்போது எங்கள் வீட்டருகில்தான் Railway Protection Force பயிற்சி மையம், பொதுவாக ஷூட்டிங் கிரவுண்டு என்போம். இந்த March-past அணிவகுப்பு, rehearsalலெல்லாம் விடியற்காலைகளில் எங்கள் வீட்டின் முன்னிருக்கும் சாலையில்தான் நடக்கும். வீட்டு பால்கனியிலிருந்து பார்ப்போம். தார்ரோட்டில் கம்பீரமாய் வீரர்கள் சீராய் நடக்கும்போது அந்த பூட்ஸ்களிலிருந்து எழும் ஒலிகள் இன்னும் காதில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது

அப்புறம் விருத்தாசலத்தில் எட்டாங்கிளாஸ் படிக்கும்போது நான்தான் க்ளாஸ் லீடர்☺️☺️. March-pastல் எங்கள் க்ளாஸை வழிநடத்திச் சென்றேன். அந்த அனுபவமும் உண்டு. அப்புறம் அவ்வளவுதான் எல்லாம் மறந்துபோயாச்சு

நியூயார்க் வந்தபிறகு Thanksgiving Parade பற்றி கேள்விப்பட்டு மூன்றுமுறை அருகில் நின்று பார்க்க முயன்று முடியாமல் போனது. சில ஆண்டுகள் முன் குடியரசுதின அணிவகுப்பை YouTubeல் ஒளிபரப்புகிறார்கள் எனத்தெரியவந்தது, இப்பொழுது அதைக்காண தவறுவதில்லை

வார்த்தைகளால் எப்படி சொல்வதென்று தெரியவில்லை, அணிவகுப்பில் ஒவ்வொரு பட்டாலியனும் மிடுக்காக நடந்து வரும்போது, அவர்களின் சீரான கம்பீரநடை, அதன் லீடர் வைக்கும் சல்யூட், தொலைக்காட்சி கமண்ட்டேட்டரின் ஸ்டைலிஷ்ஷான முன்னுரை, அதில் யார்யாரெல்லாம் பரம்வீர்சக்கர விருது வாங்கியவர்கள் என்னு தெரிவிக்கையில், வாவ்.. நாமும் இவர்களின் ஓர் அங்கம் என்றடையும் பெருமை, பூரிப்பெல்லாம் அடைந்து மயிர்க்கூச்செரியும்.

இப்படி பல வருடங்களாகப் பரேடு தாகத்தில் இருக்கையில், சென்ற வருடம் இங்கு அருகிலுள்ள West Point  Academy பற்றி நண்பர் கூறினார். அமெரிக்க சுதந்திர தினத்திற்கு அங்கு சென்று March-pastட்டையும், band வாத்தியத்தையும் அருகில் நின்று பார்த்து கேட்டு ரொம்ப வருடங்களுக்கப்புறம் என் பரேடு தாகத்தைத் தனித்துக்கொண்டேன்


ஆனால் என்னதான் இருந்தாலும் நம்நாட்டின் band வாத்தியம் & அணிவகுப்பைப் பார்த்தால்தான் அந்த goosebumpsல்லாம் வரும்😊😊


Comments

Popular posts from this blog

வெள்ளிச்சலங்கைகள்...

பொதுவாக அமெரிக்காவில் சாமானியனுக்கு எல்லாமே  எளிதில் எட்டும், இந்திய பொருள்கள், கலைகள்  உட்பட.  உதாரணமாக எந்த ஒரு புதிய‌ திரைப்படத்தையும்  முதல் நாளில்  எளிதில் பார்த்துவிடலாம், உயர்ரக மாம்பழங்கள் எப்பொழுதும் சாப்பிடலாம், இன்னும் இங்கே முனியாண்டி விலாஸ் கொத்து பரோட்டாவும் சால்னாவும் மட்டும்தான் வரவில்லை. வடக்கிந்திய, தெற்கிந்திய பொருட்கள் ஆடை ஆபரணங்கள் பெரும்பாலும் எங்கும் கிடைக்கும். இன்னும் இந்திய இதிகாச / வரலாற்று நாடகங்களுக்கான மேக்கப் சாதனங்கள் கூட கிடைக்கும். தமிழ் நாட்டில் சற்று பெரிய நகரமான திருச்சியில்கூட இவையெல்லாம் நினைத்தால்  கிடைக்காது, சரி.. சரி.. விஷயத்துக்கு வருவோம். நண்பர் ஒருவர் சில வாரங்களுக்கு முன்னால் "பிரபாவதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீங்களா, அது ஒரு இந்திய‌ கிளாசிக்கல் டான்ஸ் ஷோ, ப்ராட்வே ஷோ மாதிரி இங்கு நடத்துறாங்க,அதில் கிடைக்கும் பணம் AIM for SEVA - இந்திய குழந்தைகளின் கல்வி மற்றும் நலனுக்காக சென்றடைகிறது " என்றார். "சரி பார்க்கலாம்" என்று சொல்லியிருந்தேன். சென்ற ஞாயிறு காலை திடீரென்று அவர் வீட்டுக்கு வந்து, " வரும

சித்திரச் செவ்வானம்... சிவக்கக்கண்டேன்

Panoramic view of Bear Mountain range from Perkins Observatory நியூயார்க்கில் சுற்றிப்பார்க்க பல இடங்கள் உள்ளது , அதுபோல Newyorkers & Tri-state (Newyork, New Jersey, Connecticut பகுதி) மக்கள் சுற்றிப்பார்க்க மிக அருகில் இருக்கும் ஒரு recreational area, Bear Mountain - Harriman State Park. இது Tri-State area-வின் மத்தியில் இருக்கும் ஒரு வனாந்திரப்பகுதி - woodlands. நான் வேலை பார்க்கும் அலுவலகத்திலிருந்து பார்க்கும் தூரத்திலிருக்கிறது. Hessian Lake  அனைத்து சீசனிலும் இங்கு செல்லலாம். Camping, trekking, picnic and skiing என்று மக்கள் எப்பொழுதும் செல்லும் இடம். Bear Mountain-ல் சுற்றிப்பார்க்க பல இடங்கள் இருந்தாலும் Hessian Lake area, Seven Lakes Drive, Perkins Observatory மற்றும் நம்ம ஆட்களுக்காக மலையின் அடிவாரத்திலிருக்கும் Pomona Renganathar Temple ஆகியவை முக்கியமான இடங்கள். Queue to get Beers New Jersey வந்த புதிதில் ஆபீஸ் நண்பர்கள் Fall colors பார்க்க Bear Mountain போறோம் என்றார்கள், நானும் சென்றேன், முதன் முதலாக Hessian Lake area-க்கு, Palisades Parkway(No