Skip to main content

சித்திரச் செவ்வானம்... சிவக்கக்கண்டேன்

Panoramic view of Bear Mountain range from Perkins Observatory

நியூயார்க்கில் சுற்றிப்பார்க்க பல இடங்கள் உள்ளது , அதுபோல Newyorkers & Tri-state (Newyork, New Jersey, Connecticut பகுதி) மக்கள் சுற்றிப்பார்க்க மிக அருகில் இருக்கும் ஒரு recreational area, Bear Mountain - Harriman State Park. இது Tri-State area-வின் மத்தியில் இருக்கும் ஒரு வனாந்திரப்பகுதி - woodlands. நான் வேலை பார்க்கும் அலுவலகத்திலிருந்து பார்க்கும் தூரத்திலிருக்கிறது.
Hessian Lake


 அனைத்து சீசனிலும் இங்கு செல்லலாம். Camping, trekking, picnic and skiing என்று மக்கள் எப்பொழுதும் செல்லும் இடம். Bear Mountain-ல் சுற்றிப்பார்க்க பல இடங்கள் இருந்தாலும் Hessian Lake area, Seven Lakes Drive, Perkins Observatory மற்றும் நம்ம ஆட்களுக்காக மலையின் அடிவாரத்திலிருக்கும் Pomona Renganathar Temple ஆகியவை முக்கியமான இடங்கள்.

Queue to get Beers


New Jersey வந்த புதிதில் ஆபீஸ் நண்பர்கள் Fall colors பார்க்க Bear Mountain போறோம் என்றார்கள், நானும் சென்றேன், முதன் முதலாக Hessian Lake area-க்கு, Palisades Parkway(North)-ல் கடைசியில் உள்ளது.
Picnic-க்கு உகந்த இடம்.

மலையை ஒட்டிய பரந்த புல்வெளி அதை ஒட்டி ஓரளவுக்கு பெரிய ஏரி, summer-ல் இங்கே boatingங்கும் உண்டு, row & pedal boating - 5 வருடங்களுக்கு முன் $5 வாடகை  - ஒரு மணி நேரத்திற்கு.


Hessian Lake

ஏரியின் அருகில் சிறுவர்களுக்கான play area, ஏரியை சுற்றி நடைபாதை - இங்கே october மாதத்தில் beer festival நடக்கும். Down the hill, சாலையின் மறுபக்கம் இறங்கினால் ஹட்ஸன் நதிக்கரையில் ஒரு dock, நதியோரம் grill போட உகந்த இடம், முடிந்தால் fresh-ஆக மீன் பிடித்து வறுத்து சாப்பிடலாம் - fishing license தேவை என்று நினைக்கிறேன்.
Bear Mountain bridge - view from the dock





முதல் 2-3 வருடம் Hessian lake-க்கு மட்டும் சென்று கொண்டிருந்தேன், summer
weekends கூட்டம் அதிகமாக இருக்கும், Hessian lake-ல் paid parking உண்டு - $5.
மற்ற இடங்களில்லாம் பெரும்பாலும் curb-side parking தான்.


கொஞ்சம் Bear Mountain area நன்றாக பரிச்சயமானதால் கடந்த 3 வருடங்களாக Seven lakes drive-ம் செல்ல ஆரம்பித்தேன், fall colors பார்க்க அருமையான இடம். இருபது மைல் சாலையில் ஏழு ஏரிகள், அக்டோபர் கடைசி இரண்டு வாரங்களில் அனைவரும்  பெரிய digital SLR கேமராவும் கையுமாக சுற்றுவார்கள்  - இப்போது அவர்களுடன் நானும் ஐக்கியமாகிவிட்டேன். அதிலும் வயதான சிலர் professional photographer-சுடன் வருவர்.

அங்கு என்னுடைய favorite spot Silver Mine lake & Lake Nawahunta, அமைதியான இடம், கார் parking-ம் எளிது, சிறு மலையை(குன்றை) ஒட்டி அமைந்துள்ளது.

Panoramic view of Silver Mine Lake


Silver Mine Lake - Autumn

Silver Mine Lake - Winter


எதிரில் இருக்கும் மலை - fall colors
முதல் முறை அங்கு சென்றபோது மக்கள் சாரைசாரையாக ஒரு ஒத்தையடி பாதையில் மலையின்மீது ஏறிக்கொண்டிருந்தனர், என்னதான் இருக்கிறது என்று நானும் அவர்களுடன் மூச்சு வாங்க ஏறிச்சென்றேன், கடைசியில் ஒன்னுமேயில்லை, அங்கிருந்து பார்த்தால் எதிரில் இருக்கும் மலையின் fall colors நன்றாகத் தெரிகிறது, அவ்வளவுதான்.




Silver Mine - Autumn
நல்ல snow storm-ன் போது இங்கு வந்தால் snow  tubing / skiing-க்கு  நன்றாக இருக்கும் என்று நினைத்தேன், அட.. அதேபோல் அந்த winter-ல் ஒரு வியாழன்-வெள்ளி நல்ல snow storm, road cleaning-க்காக ஒரு நாள் இடைவெளி விட்டு ஞாயிறு அங்கு சென்றேன், நினைத்தது போலவே அருமை, அருமையாக snow tubing, ஏரி முழுவதும் ice-ஆகி இருந்தது.

Silver Mine - Winter


அதே seven lakes drive-ல் Hessian lake-க்கும் Silver mine lake-க்கும் இடையே, Perkins Memorial drive-ல் மலையின் உச்சிக்கு சென்றால், Perkins Memorial  Observatory அங்கிருந்தது பார்த்தால் Bear  Mountain range முழுவதுமாகத் தெரியும். எதேச்சையாக கூகுள் மேப்பில் தேடும்போது இது பற்றிய தகவல் கிடைத்தது.






Panoramic  view  of Lake Nawahunta 
Lake Nawahunta

சென்ற வருடமும் இந்த வருடமும் ஒரு முறைதான் அங்கு செல்ல முடிந்தது. இந்தியாவிலிருந்து பெற்றோர் வந்திருக்கிறார்கள் கடந்தவாரம் அவர்களுடன் சென்றேன். சென்றமுறை fall season-ல் Palisades parkway வழியாக சென்ற போது பயங்கர traffic. 5 மைல் நகர ஒரு மணி நேரம் ஆயிற்று, Perkins Memorial Drive செல்லும் exit-யையும் மூடிவிட்டார்கள்.


அதனால் இந்த முறை 287N பிடித்து RT 17N sloatsburg வழியாக (Woodbury outlet-க்கு போகும் வழி) Seven Lakes Drive-ல் நுழைந்தேன், எதிர்பார்த்த அளவிற்கு traffic இல்லை - அதே போல் scenic-காகவும் இல்லை, அப்பா அம்மாவும் குளிருது வீட்டுக்கு போலாம் என்றார்கள்  Silver Mine Lake அருகே சில போட்டோ மட்டும் எடுத்துவிட்டு கிளம்பினேன்.





சமயங்களில் திட்டமிட்டு செய்யும் காரியத்தில் தற்செயலாக எடுக்கும் முடிவுகள்தான் நல்ல பலனைத்தரும். அதுபோல, அங்கிருந்து திரும்பும்போது traffic circle-ல் கடைசி நிமிடத்தில் வீட்டுக்குப்போக Palisades Parkway South எடுக்காமல், "ஒரு 5 நிமிஷம், Bear Mountain மேல போய் பார்த்துட்டு போலாம்"னு சட்டென்று Perkins Memorial Drive exit எடுத்தேன், வெயில் இறங்கிக்கொண்டே இருந்தது, கொஞ்சமாவது வெயில் இருந்தால்தான் போட்டோ நல்லா வரும்னு வேண்டிக்கொண்டே சென்றேன், என் நேரம் பார்த்து முன்னாள் சென்ற கார் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது, ஒரு வழியாக உச்சியை அடைந்து காரை park பண்ணும்போது, ஒரு SUV தவறாக எதிர்திசையில் வந்ததால் களேபரமாயிற்று, ஒரு வழியாக காரை park செய்துவிட்டு observatory அருகே சென்றேன்.




நீல வானம் மஞ்சள் வெயில், அந்திசாயும் நேரம் சூரியன் மெல்ல அஸ்தமித்துக்கொண்டிருந்தது, வெளிச்சத்திலேயே போட்டோவை க்ளிக்கலாம் என்று ஏதாவது ஒரு location தேர்ந்தெடுத்தால் பின்னாடியே வந்து கீழே தள்ளிவிடுவதுபோல் பலர் நின்று கொண்டிருந்தார்கள். 
ஒரு ஜோடி அழகாக பாறையின் மீது அமர்ந்து அஸ்தமத்தை ரசித்துக்கொண்டிருந்தார்கள் - தங்கள் நாயுடன்.   மலைமேல் குளிர் இன்னும் அதிகமாக இருந்ததால் வேகமாக படங்களை எடுத்துவிட்டு கிளம்பினேன், ஆனால் சூரியன் அஸ்தமம் அருமையாக இருந்ததால் கிளம்ப மனமில்லாமல் காரை ஸ்டார்ட் பண்ணி மெல்ல observatory  முன் வரும்போது ஒரு parking spot காலியாக இருந்தது, அப்படியே சூரியனை பார்த்து காரை நிறுத்திவிட்டு நான் மட்டும் கேமராவுடன் காரிலிருந்து இறங்கினேன், வாவ்... நிமிடத்தில் சூரியன் தூங்கச்சென்றுவிட்டது. இவ்வளவு தூரம் வந்தது வீண்போகவில்லை இந்த சீசனுக்கு இது போதும் அப்படின்னு நிறைவாகத் திரும்ப காரில் அமர்ந்து கிளம்பினேன். 


Clear crispy weather-ல் Perkins Observatory-லிருந்து NYC skyline கூட தெரியும் 





      பெரும்பாலும் Bear  Mountain போகும்போதோ அல்லது வரும்போதோ Pomona கோயிலில் ரெங்கநாதரை தரிசித்துவிட்டுத்தான் வருவோம், மலையின் அடிவாரத்தில் ஒரு 15 மைல் தொலைவில் உள்ளது, கூட்டம் அதிகமாக இருக்காது, மேலும் அங்கே சாப்பாடும்(பிரசாதம்) இலவசம், லஞ்ச் or டின்னர் அங்கேதான் சில நாட்கள் முன் வரை அங்கே பொங்கலும், வாங்கிபாத்தும் நல்லா இருக்கும் இப்போ சமையற்காரர் மாறிவிட்டார் என்று நினைக்கிறேன், TOGO கூட எடுத்துச் செல்லலாம் - அப்படி எடுக்க நேரும்போது கொஞ்சம் extra -வாக உண்டியலில் பணம் போட்டுவிடுவேன் . சாமிக்கு அர்ச்சனையும் இலவசம், மேலும் ஒரு சிறப்பு அங்கு ரெங்கநாதருக்கு தமிழிலும் அர்ச்சனை செய்வர்.

இது போல woodlands -க்கு செல்லும்போது முன்னெச்சரிக்கையாக allergy medicine கையிருப்பில் வைத்திருப்பது நல்லது, ஒரு முறை என் சட்டையினுள் பெரிய வண்டு புகுந்துவிட்டது - நல்லவேளை கடிக்கவில்லை. மேலும் பல இடங்களில் செல்போன் சிக்னல் கிடைக்காது, குழுக்கள் பிரிந்து விட்டால் தடுமாற வேண்டியிருக்கும். Last but not least, நான் சொன்ன இந்த இடங்களில்  rest room வசதிகள் உண்டு.





நம்ம Tristate area மக்கள் ரிலாக்சாக ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு நல்ல இடம். இன்னும் நிறைய சொல்லலாம் அதைவிட நான் எடுத்த படங்கள் நிறைய சொல்லும் என்று நினைக்கிறேன். நான் ரசித்த அந்த சூரியன் அஸ்தமிக்கும் காட்சிகள் இங்கே படங்களாக. கீழே route map-ம் போட்டுள்ளேன்.










Comments

Post a Comment

Popular posts from this blog

வெள்ளிச்சலங்கைகள்...

பொதுவாக அமெரிக்காவில் சாமானியனுக்கு எல்லாமே  எளிதில் எட்டும், இந்திய பொருள்கள், கலைகள்  உட்பட.  உதாரணமாக எந்த ஒரு புதிய‌ திரைப்படத்தையும்  முதல் நாளில்  எளிதில் பார்த்துவிடலாம், உயர்ரக மாம்பழங்கள் எப்பொழுதும் சாப்பிடலாம், இன்னும் இங்கே முனியாண்டி விலாஸ் கொத்து பரோட்டாவும் சால்னாவும் மட்டும்தான் வரவில்லை. வடக்கிந்திய, தெற்கிந்திய பொருட்கள் ஆடை ஆபரணங்கள் பெரும்பாலும் எங்கும் கிடைக்கும். இன்னும் இந்திய இதிகாச / வரலாற்று நாடகங்களுக்கான மேக்கப் சாதனங்கள் கூட கிடைக்கும். தமிழ் நாட்டில் சற்று பெரிய நகரமான திருச்சியில்கூட இவையெல்லாம் நினைத்தால்  கிடைக்காது, சரி.. சரி.. விஷயத்துக்கு வருவோம். நண்பர் ஒருவர் சில வாரங்களுக்கு முன்னால் "பிரபாவதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீங்களா, அது ஒரு இந்திய‌ கிளாசிக்கல் டான்ஸ் ஷோ, ப்ராட்வே ஷோ மாதிரி இங்கு நடத்துறாங்க,அதில் கிடைக்கும் பணம் AIM for SEVA - இந்திய குழந்தைகளின் கல்வி மற்றும் நலனுக்காக சென்றடைகிறது " என்றார். "சரி பார்க்கலாம்" என்று சொல்லியிருந்தேன். சென்ற ஞாயிறு காலை திடீரென்று அவர் வீட்டுக்கு வந்து, " வரும

என்று தனியும் இந்த சுதந்திர தாகம்..

Band சத்தம் எங்கே கேட்டாலும் அப்படியே என்னை ஈர்க்கும் , அதில் லயிச்சு அங்கேயே நின்றிடுவேன் . இந்த band, March-past ற்கும் எனக்கும் சிறுவயதிலேயே சின்னத்தொடர்பு உண்டு . சிறுவயதில் திருச்சி காஜாமலை காலனியில் இருக்கும்போது எங்கள் வீட்டருகில்தான் Railway Protection Force பயிற்சி மையம் , பொதுவாக ஷூட்டிங் கிரவுண்டு என்போம் . இந்த March-past அணிவகுப்பு , rehearsal லெல்லாம் விடியற்காலைகளில் எங்கள் வீட்டின் முன்னிருக்கும் சாலையில்தான் நடக்கும் . வீட்டு பால்கனியிலிருந்து பார்ப்போம் . தார்ரோட்டில் கம்பீரமாய் வீரர்கள் சீராய் நடக்கும்போது அந்த பூட்ஸ்களிலிருந்து எழும் ஒலிகள் இன்னும் காதில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது .  அப்புறம் விருத்தாசலத்தில் எட்டாங்கிளாஸ் படிக்கும்போது நான்தான் க்ளாஸ் லீடர் ☺️☺️ . March-past ல் எங்கள் க்ளாஸை வழிநடத்திச் சென்றேன் . அந்த அனுபவமும் உண்டு . அப்புறம் அவ்வளவுதான் எல்லாம் மறந்துபோயாச்சு .  நியூயார்க் வந்தபிறகு Thanksgiving Parade பற்றி கேள்விப்பட்டு மூன்றுமுறை அருகில் நின்று பார்க்க முயன்று