Skip to main content

Posts

Showing posts from June, 2012

திருத்தறசாமி !!!

 பொறியியல் இளங்கலை இறுதியாண்டு -இயந்திரவியல், 8வது செமஸ்டர், 66% எந்த அரியர்ஸும் இல்லை - all clear.  இன்னும்  3 மாதங்களில்  Engineer!. மாமாவிற்கு தெரிந்த நண்பர்கள் வேலை  செய்யும் கம்பெனிகளில் ஏறி இறங்கி கம்பெனி ப்ராஜெக்ட் எதுவும் கிடைக்காமல் நண்பன் சடாச்சரதிற்கு தெரிந்த திருநெல்வேலி நண்பனிடமிருந்து எடுத்து வந்த ஒரு ப்ராஜெக்டை சற்று வித்தியாசமாக மாற்றி பைனல் இயர் ப்ராஜெக்டை முடிக்க பாடுபட்டுக்கொண்டிருந்தோம். மண் துகள்களை கம்பரசரிலிருந்து வரும் காற்றில் சேர்த்து  ஒரு சிறிய நாசில் மூலமாக பீச்சியடித்து கண்ணாடி மற்றும் மைக்கா ஷீட்டுகளில் துளைபோடுவது - harnessing non-conventional sources of energy, அந்த சப்ஜெக்ட் எடுக்கும் லெக்சரர்தான் எங்கள் பிராஜெக்ட் கைடு .  1995 பிப்ரவரி மாதம், முதல் வாரம்  புதன்கிழமை மதிய இடைவேளையில் நண்பர்கள் இன்று 7th செமஸ்டர் ரிசல்ட் வருகிறது என்று  பேசிக்கொண்டிருந்தார்கள். 3.30 மணி வாக்கில் காலேஜ் முடியும் நேரத்தில் டிபார்ட்மென்ட் நோட்டிஸ் போர்டில் ரிசல்ட் வெளியிட்டிருந்தனர். எனது நம்பர் உள்பட 6 பேரின் நம்பர்கள் ரிசல்ட் பேப்பரில்  மறைக்கப்பட்டிருந்தது - withhel