Band சத்தம் எங்கே கேட்டாலும் அப்படியே என்னை ஈர்க்கும் , அதில் லயிச்சு அங்கேயே நின்றிடுவேன் . இந்த band, March-past ற்கும் எனக்கும் சிறுவயதிலேயே சின்னத்தொடர்பு உண்டு . சிறுவயதில் திருச்சி காஜாமலை காலனியில் இருக்கும்போது எங்கள் வீட்டருகில்தான் Railway Protection Force பயிற்சி மையம் , பொதுவாக ஷூட்டிங் கிரவுண்டு என்போம் . இந்த March-past அணிவகுப்பு , rehearsal லெல்லாம் விடியற்காலைகளில் எங்கள் வீட்டின் முன்னிருக்கும் சாலையில்தான் நடக்கும் . வீட்டு பால்கனியிலிருந்து பார்ப்போம் . தார்ரோட்டில் கம்பீரமாய் வீரர்கள் சீராய் நடக்கும்போது அந்த பூட்ஸ்களிலிருந்து எழும் ஒலிகள் இன்னும் காதில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது . அப்புறம் விருத்தாசலத்தில் எட்டாங்கிளாஸ் படிக்கும்போது நான்தான் க்ளாஸ் லீடர் ☺️☺️ . March-past ல் எங்கள் க்ளாஸை வழிநடத்திச் சென்றேன் . அந்த அனுபவமும் உண்டு . அப்புறம் அவ்வளவுதான் எல்லாம் மறந்துபோயாச்சு . நியூயார்க் வந்தபிறகு Thanksgiving Parade பற்றி கேள்விப்பட்டு மூன்றுமுறை அருகில் நின்று பார்க்க முயன்று