Skip to main content

முடியுமா.. நடக்குமா..

இதுவரைக்கும் எந்த சினிமாப்படத்தையும் First Day First Showல்லாம் பார்த்ததில்லை, First Day Last Show வேணும்னா சிலமுறை பார்த்திருக்கேன், அதுவும் எங்க மாமா புண்ணியத்துல.

எங்க தாத்தா - அம்மாவின் அப்பா - அவங்க கிராமத்தில் ஒரு தியேட்டர் வச்சிருந்தாங்க. காலேஜ் மற்றும் வேலை தேடிட்டிருந்த நாட்களில் பொங்கல், தீபாவளிக்கு ஊருக்குப் போகும்போது பெரிய நடிகர்கள் படம் ஏதாவது ரிலீஸ் ஆச்சுனா முதல்நாள் நைட் செகண்ட் ஷோ - First Day Last Show உறுதி. ஒரு சுமோவில் எத்தனைபேர் ஏற முடியுமோ அத்தனை கசின்ஸூடன் எங்க ஊரிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள கும்பகோணத்திற்குக் கிளம்பிடுவோம். மாமா தியேட்டர் ஓனர்ங்கிறதால அவங்க contacts வச்சி  எப்படியும் டிக்கெட் வாங்கிடுவாங்க.  தளபதி, பாண்டியன், பாட்ஷா, முத்து போன்ற ரஜினி படங்களெல்லாம் அப்படி பார்த்ததுதான்.

அதுக்கப்புறம் மெட்ராசுல வேலைன்னு செட்டிலானதுக்கப்புறம் படம் ரிலீசாகி ரெண்டு மூனு வாரம் கழிச்சு விகடன்ல விமர்சனம் ஓகேன்னா போய்ப்பார்ப்பேன்.

அமெரிக்கா வந்ததுக்கப்புறம் ரஜினி, கமல் & ஷங்கர் படங்கள் மட்டும் தியேட்டர்ல போய் பார்க்கிறதுன்னு ஒரு கொள்கை வச்சிருக்கேன் - வச்சிருந்தேன். அதுவும் எந்திரன் படத்துக்கப்புறம் வந்த எந்த ரஜினி படத்தையும்  பார்க்கவேயில்லை. போனவருசம் வந்த கமலோட உத்தம வில்லன் நான் மட்டும் தியேட்டர்ல தனியா உட்கார்ந்து பார்த்தேன், தியேட்டர்ல ஒரு பய இல்ல. அதுக்கப்புறம் கமல்படத்தை தியேட்டர்ல போய் பார்க்கணுமான்னு மறுபரிசீலனை செய்யவேண்டி வந்துச்சு.. இருந்தாலும் ரிஸ்க் எடுத்து கமலோட பாபநாசம் தியேட்டர்ல போய் பார்த்தேன்.

இந்த வருசம் இன்னும் எந்தத் தமிழ்படத்தையும் தியேட்டர்ல போய் பார்க்கல. தமில்கன்லயே கண்ணாயிருந்த என்னிடம் என் மனைவி போனவாரம், "அண்டை வீட்டாரெல்லாம் கபாலி படத்துக்கு முதல் நாளே தியேட்டர்ல பார்க்கப்போறாங்களாம், நாமும் போவோமா" என்று கோரிக்கை வைத்தாள், தட்ட முடியுமா?. முதல்நாள் ஒரே கூச்சலா இருக்கும்.. Weekday வேற..  சமீபத்துல வந்த விஜய் படம் முதல் நாள் ஓட்ட முடியலன்னு செய்தி.. இப்படி பல யோசனைகளுக்கு நடுவே சரி டிக்கெட் எவ்வளவு என்று பார்த்தால், ஒரு டிக்கெட் $25. இங்கு ரிலீசாகும் இங்கிலீஷ் படங்களை விட ரெண்டு மூன்று மடங்கு அதிகம். சரி யோசிப்போம்னு பார்த்தா மறுநாள் ஆபீசில் ஒரு நண்பர், "கபாலிக்கு டிக்கெட் வாங்கிட்டீங்களா? நான் வாங்கிட்டேன்" என்றார். "இல்லைங்க அநியாயத்துக்கு ஒரு டிக்கெட் 25 டாலர்ன்னு போட்டிருக்கான்னு" சொன்னேன். "அட.. ரஜினி இன்னும் எவ்ளோ நாள் நடிப்பார்னு தெரியல, அதில்லாமல் ரஜினி படம் முதல்நாள் பார்க்கிறதுதான் ஒரு ஜாலியே"ன்னார். "எல்லாரும் முதல் நாளே பார்த்தா மற்ற நாட்களில் பார்க்க ஆள் வேணுமில்லையா.. அதனால நான் பத்து நாள் கழிச்சு டிக்கெட் பாதிரேட்டுக்கு வரும்போது படத்தை பார்த்துக்கிறேன்னு" வீராப்பா சொல்லிட்டேன். இன்னைக்குக் காலையில ஆபீசுல இன்னொருத்தரு கபாலி ரிசர்வ் பண்ணின டிக்கெட் காமிச்சி "நானும் என் பொண்டாட்டியும் பதினாலு வருசத்துக்கப்புறம் தியேட்டர்ல போய் ஒன்னா படம் பார்க்கப்போறோம், நான் அன்னைக்கு லீவு போட்டுட்டேன்னு" கிருஷணாயில் இல்லாமலே என் மனசை பத்த வச்சிட்டுப் போனாரு.

சாமானியனுக்கு எல்லாமே எளிதில் எட்டுகிற அமெரிக்காவில First Day Showவும் ஈசிதான். அதுலயும் இது ரஜினி படம், ரஜினி இப்பல்லாம் நாலைஞ்சு வருசத்துக்கு ஒருமுறைதான் நடிக்கிறார், அடுத்தபடம் எப்ப வரும்னு தெரியாது, அந்த பேக்டரில சங்கு ஊதற நெருப்புடா.. பாட்டு என்று மன..மன..மன..ன்னு மெண்டலாய் மனது உசுப்பினாலும், எக்ஸ்ட்ராவா கொடுக்கிற  காசுக்கு ஒழுங்கா ஏதாச்சும் செலவு பண்ணலாம், இன்னைக்கு 25டாலர்ன்னு சொல்றவன் நாளைக்கு டிக்கெட் நூறு டாலர்னு சொல்லுவான்.. அப்ப என்ன செய்வ? அந்தக்காசுக்கு நல்லா சாப்பிட்டாலும் பரவாயில்லை, அவ்வளவு ஏன் திருச்சில நீ படிச்ச ஸ்கூல சுத்திதான் எல்லா பிரமாண்ட தியேட்டரும் இருக்கு.. இருந்தும் ஒருநாள்கூட கட் அடிச்சிட்டு படத்துக்கு போனதில்லை.. இப்ப இதென்ன பொல்லா வயதா? வேலைய கட் அடிச்சிட்டு அப்படி என்ன சினிமா வேண்டியிருக்கு?.. என புத்தி டக்க..டக்க..டக்க..ன்னு கொட்டுது. பக்கத்தில இருக்கிற மனசு சொல்றத கேட்கிறதா இல்ல எட்ட இருந்தாலும் அப்பப்ப குட்டுகிற இந்த கூறுகெட்ட புத்தி சொல்றதை கேட்கிறதான்னு என் பாக்கெட் இப்ப கரண்ட் கம்பியில மாட்டிக்கிட்ட காத்தாடி மாதிரி ஆடிட்டிருக்கு, ரெண்டு நாள்தான் இருக்கு, முடியுமா.. நடக்குமா.. இன்னும்.

Comments

  1. வேலை அதிகமா தம்பி? கொஞ்ச நாளாவே blog ல வரவேயில்ல!

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருத்தறசாமி !!!

 பொறியியல் இளங்கலை இறுதியாண்டு -இயந்திரவியல், 8வது செமஸ்டர், 66% எந்த அரியர்ஸும் இல்லை - all clear.  இன்னும்  3 மாதங்களில்  Engineer!. மாமாவிற்கு தெரிந்த நண்பர்கள் வேலை  செய்யும் கம்பெனிகளில் ஏறி இறங்கி கம்பெனி ப்ராஜெக்ட் எதுவும் கிடைக்காமல் நண்பன் சடாச்சரதிற்கு தெரிந்த திருநெல்வேலி நண்பனிடமிருந்து எடுத்து வந்த ஒரு ப்ராஜெக்டை சற்று வித்தியாசமாக மாற்றி பைனல் இயர் ப்ராஜெக்டை முடிக்க பாடுபட்டுக்கொண்டிருந்தோம். மண் துகள்களை கம்பரசரிலிருந்து வரும் காற்றில் சேர்த்து  ஒரு சிறிய நாசில் மூலமாக பீச்சியடித்து கண்ணாடி மற்றும் மைக்கா ஷீட்டுகளில் துளைபோடுவது - harnessing non-conventional sources of energy, அந்த சப்ஜெக்ட் எடுக்கும் லெக்சரர்தான் எங்கள் பிராஜெக்ட் கைடு .  1995 பிப்ரவரி மாதம், முதல் வாரம்  புதன்கிழமை மதிய இடைவேளையில் நண்பர்கள் இன்று 7th செமஸ்டர் ரிசல்ட் வருகிறது என்று  பேசிக்கொண்டிருந்தார்கள். 3.30 மணி வாக்கில் காலேஜ் முடியும் நேரத்தில் டிபார்ட்மென்ட் நோட்டிஸ் போர்டில் ரிசல்ட் வெ...

Panorama பக்கம்

Amateur புகைப்படக்காரர்களுக்கு iPhone சில வேலைகளை சுலபமாக்கியுள்ளது, அதில்அருமையான ஒன்று Panoramio, சாதாரண கண் காணும் காட்சியை விட அகலமாக படம் எடுப்பது. இது புகைப்படத்திற்கும் புதிய  பரிமாணத்தை அளிக்கும். காட்சியும் புது வடிவம் பெற்று விவரமான தோற்றத்தை கொடுக்கும். நான் கிளிக்கிய சில panoramic view படங்கள் இங்கே.

ஓ.. பக்கம்

2004 நவம்பரில் ksrk எனது தம்பி மூலமாக எனக்கு அறிமுகம் , அவர் எழுத்தாளரும்கூட என்று அறிமுகம் செய்தான் . சில வருடங்கள் கழித்து அவருடைய வலைப்பதிவுகள் / கதைகள் படித்தேன் . அவருடைய வெப்ஸைட்டில் அவரின் டிவிட்டர் ஐடியைப் பார்த்து சரி நாமும் ட்விட்டரில் ஒரு கணக்குத் தொடங்குவோம் எனத்தொடங்கி பின்தொடர்ந்தேன் .  பின் ட்விட்டர் ரெகமெண்ட் செய்ய @elavasam கொத்தனாரைப் பின்தொடர்ந்தேன் . அவர் ட்விட்டுகள் ஜாலியா இருந்தது . பின் அவர் ஜாலியா தமிழ் இலக்கணம்னு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்று தெரியவந்தது . பள்ளியில் தமிழ் பாடத்தில் பல சமயம் க்ளாஸ் ஃபர்ஸ்ட் எடுத்துள்ளேன் , புலவர் மன்றத்தேர்வில் பள்ளியில் முதலாக வந்து பரிசெல்லாம் வாங்கியுள்ளேன் . பள்ளிப்படிப்பு முடிந்ததும் 1991 னோட தமிழ் இலக்கணம் , இலக்கியம் எல்லாம் விட்டுப்போய் மறந்துபோச்சு .  பதினெட்டு வருசம் கழித்து தமிழ் இலக்கணம் அதுவும் ஜாலியா கத்துக்கலாம்னு சொல்லுறாரேன்னு ஒரு ஆர்வம் வந்துடுச்சி , ஆனால் எப்படி அந்த புத்தகத்தை வாங்குறதுன்னு தெரியல . அப்ப நி...