Skip to main content

காலங்காத்தால இம்சை பண்ணாத



Breakfast - முப்பது வயசு வரைக்கும் இட்லிதான் காலையில எனக்கு பிரதான உணவு. ஸ்கூல் படிக்கும் வரை தினமும் காலையில் சாப்பாட்டுத் தட்டில் இட்லி  - தமிழ் சினிமா ஹீரோ போல எப்பொழுதுமிருக்கும், சட்னி மட்டும்தான் தமிழ் சினிமா  ஹீரோயினி போல மாறும், சமயங்களில் சாம்பார் அல்லது இட்லிப்பொடி செகண்ட் ஹீரோயினா வரும்.

ஸ்கூலுக்கு கிளம்பும்போது அம்மா திட்டுவாங்களேன்னு கடமைக்கு ரெண்டு இட்லி, ரொம்ப முறைச்சா மூனு, அதுக்குமேல உள்ள இறங்காது, பஸ்ஸுக்கு லேட்டாச்சுன்னு சொல்லிட்டு எஸ்கேப். சிலசமயங்களில் சமையலறையிலிருந்து தோசை செகண்ட் ஹீரோவா வரும். உப்புமா, பொங்கல், பூரி அப்பப்ப காலையில் குணச்சித்திர ரோலில் எட்டிப்பார்க்கும். காலேஜ் சேர்ந்ததுக்கப்புறம் ஹாஸ்டல்வாசம். காலையில திட்டுறதுக்கு அம்மா இருக்கமாட்டாங்க, அதனால இட்லி/பொங்கல் போடுற பெரும்பாலான நாட்கள் காலையில விரதம்தான். வேலைக்கு போக ஆரம்பிச்சதும் திட்டுறதுக்கு யாரும் இல்லைனாலும் பசிக்குமே.. அதனால எந்த மெஸ்சுக்குள்ளயாவது நுழைஞ்சு அதே இட்லி.. இல்ல ஊத்தப்பம்.. இல்ல பூரி.. சில சமயம் அதுவும் கட். பேச்சுலர் லைஃப்ல பல நாட்கள் காலை உணவு என்பது இல்லாமலே போச்சு. 

கல்யாணம் ஆச்சு, அம்மாவாச்சும் நான் ஹைஸ்கூல் படிக்கிறதிலேர்ந்து இட்லிக்கு மாற்றாக உப்புமா, தோசை, இடியாப்பம்னு கண்ணுல காட்டுனாங்க, பட் இங்க திரும்ப இட்லி!! கபாலி மாதிரி 'நான் திரும்ப வந்திருக்கேன்னு சொல்லு.. இட்லிடா...' அப்படின்னு காலையில டைனிங் டேபிள்ல வந்து கால்மேல கால்போட்டு உட்கார்ந்திடுச்சு. 

அப்புறம் அமெரிக்கா வந்தாச்சு.. திரும்ப பேச்சுலர் வாழ்க்கை, காலையில ஹோல்மில்க்ல ஒரு டம்ளர் காபி குடிச்சிட்டு ஒரு முழம் சைஸ்ல இருக்கிற வாழைப்பழம் அதான் காலை உணவு. அப்புறம் ஊடால இந்த cereal காலை உணவாக சின்ன ரோல் பண்ண ஆரம்பிச்சுது, அப்படியே மெல்ல மெல்ல வளர்ந்து ஹீரோவாகி எனக்குப் பிரதான காலை உணவாயிடுச்சி. ஒரு கப்  சூடான பாலில் Post - Honey bunch of oatsஸ அஞ்சு நிமிசம் ஊறவச்சு சாப்பிடுறது வழக்கமாயிடுச்சி. அப்பப்ப இட்லி வரும். ஆனால் நான், 'இல்லமா.. வயசாயிடுச்சின்னு நினைக்கிறேன் இட்லி சாப்பிட்டா நெஞ்சக்கறிக்கிறமாதிரி இருக்கு, அதுமட்டுமில்லாமல் இட்லி சாப்பிட்டா வயிறு ஃபுல் ஆயிடுது சட்டைய இன் பண்ண முடியல'ன்னு இல்லத்தாளிடம் இனிமையாகக்கூறி எஸ்ஸாகிடுவேன். 

ஏறத்தாழ பத்துவருசமா காலை உணவு இந்த cerealதான், பசி ருசிக்காகவெல்லாம் சாப்பிட்டது போயி, இப்ப எங்க பசிச்சிடுமோன்னு பயத்துல டையத்துக்கு சாப்பிடுறதுதானேன்னு ரெகுலரா இந்த cereal டிவி மெகாசீரியல் கணக்கா காலையில உணவாக ஓடிட்டிருந்துச்சி. ஆண்டவா இதுக்கு மாற்றே கிடையாதான்னு தேடிட்டிருந்தப்ப ஒரு சனிக்கிழமை காலையில் டிவியில ஒரு அம்மா egg scramble செய்வதெப்படின்னு சொல்லிட்டிருந்தாங்க. 

ஒரு bowlல நாலைஞ்சு முட்டைய உடைச்சு அதுல கொஞ்சம் half&half milk சேர்த்து நல்லா கலக்கி அடுப்புல சிம்ல வச்ச ஒரு panல கொஞ்சம் butter விட்டு அதுல அந்த கலக்குன முட்டைய ஊத்தி முக்காவேக்காட்டுல பொரிச்சு கொஞ்சம் உப்பும் மிளகும் தூவினா.. egg scramble ரெடி!. இது ஈசியா இருக்கே.. அஞ்சே நிமிசத்துல செஞ்சிடலாமேன்னு அப்பப்ப காலை உணவாச்சு. 

அதுக்கப்புறம் மெல்ல மெல்ல கார் டயரா இருந்த இடுப்பு பஸ் டயராயிடுச்சி. இப்படியே விட்டா டிராக்டர் டயர் ஆயிடும்னு, cerealலே கதின்னு திரும்ப வந்துட்டேன். அப்படி cerealல் சீரிய ஞானத்தில் இருந்தப்ப.. மூஞ்சி பொஸ்தகத்துல ஒரு ஷேர் - வகைவகையா smoothie செய்வது எப்படின்னு. 

முதல்ல ஆப்பிள்-வாழைப்பழ-ஸ்ட்ராபெர்ரி smoothie, கொஞ்சநாள் ஓடுச்சு, ஆனா என் பையனுக்கு பிடிக்கலை எனக்கும் ஏதோ டயர்ல காத்து ஃபுல்லான ஃபீல். இது சரியான மாற்று இல்லைன்னு அடுத்த smoothie, மாம்பழ-ஸ்ட்ராபெர்ரி இதுவும் பையனுக்கு பிடிக்கலை. வீட்ல ஏதாவது மெஜாரிட்டி கிடைச்சாதானே ஓட்ட முடியும். அடுத்தது pear-kiwi-புதினா-இஞ்சி இந்தக்கலவை கொஞ்சம் விறுவிறுன்னு இருக்கிறதால ஒரு புத்துணர்ச்சி ஃபீல், பையனும் ஓரளவுக்கு ஓகே சொல்லிட்டான். சில வாரங்களாக இது ஓடிட்டிருக்கு.



சில சமயங்களில் வீட்டிலிருந்து லஞ்ச் எடுத்துவரவில்லையெனில், கணிணிப் பணியின் ஊடே இந்தப் PaneraBreadல் Paniniயை rapidடாகப் பிக்கப் பண்ணி கொறிப்பது வழக்கம். ஆனால், போனவாரம் இந்த Salad எனது விருப்ப உணவு இல்லையென்றாலும், ஒரு மாறுதலுக்காக அந்த வெப்சைட் ரெகமண்டு செய்ததால் ஆர்டர் செய்தேன். Lettuceசில்,  கொஞ்சம் ஸ்ட்ராபெர்ரி - பைனாப்பிள் - grilled chicken தூவி அதன் மேலே வேகவைத்த முட்டை - சாப்பிட்டேன், பரவாயில்லை நான் எதிர்பார்த்ததைவிட சுவையாகவே இருந்தது. அடுத்தநாள் நானே அந்த saladடை வீட்டில் ட்ரை பண்ணினேன்  Lettuceசில் ஒருநாள் ஸ்ட்ராபெர்ரி ஒருநாள் திராட்சை ஒருநாள் ஆரஞ்சு அப்புறம் சிக்கனுக்கு பதிலாக walnuts.. தட்ஸ் இட், கலக்கல் breakfast.  இந்த வெள்ளக்காரங்க எப்படித்தான் இலை தழைய சாப்பிடுறாங்களோன்னு சலிப்புடன் பார்த்திட்டிருந்த நானே இப்ப அந்த இலை தழைய மேய ஆரம்பிச்சுட்டேன்.

தினமும் cereal மட்டுமே உணவாக ஓடிட்டிருந்த காலைகளில் இப்போ வெரைட்டி!. ஒருநாள் smoothie + salad, ஒருநாள் smoothie +egg scramble அப்புறம் என்னதான் இருந்தாலும் பழச மறக்கக்கூடாதில்லையா அதனால் ஒருநாள் நம்ம cereal + smoothie.  இன்னொரு முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேன், சனிக்கிழமை காலைகளில் கேழ்வரகுக்கூழ் வித் பெப்பர் ஆம்லெட் and ஞாயிறு காலை பழைய சோறு வித் சுண்டக்காய்ச்சிய குழம்பு - இந்தப் பழமையையும் மறக்கக்கூடாதில்லையா.

மகிழ்ச்சி.


Comments

Popular posts from this blog

திருத்தறசாமி !!!

 பொறியியல் இளங்கலை இறுதியாண்டு -இயந்திரவியல், 8வது செமஸ்டர், 66% எந்த அரியர்ஸும் இல்லை - all clear.  இன்னும்  3 மாதங்களில்  Engineer!. மாமாவிற்கு தெரிந்த நண்பர்கள் வேலை  செய்யும் கம்பெனிகளில் ஏறி இறங்கி கம்பெனி ப்ராஜெக்ட் எதுவும் கிடைக்காமல் நண்பன் சடாச்சரதிற்கு தெரிந்த திருநெல்வேலி நண்பனிடமிருந்து எடுத்து வந்த ஒரு ப்ராஜெக்டை சற்று வித்தியாசமாக மாற்றி பைனல் இயர் ப்ராஜெக்டை முடிக்க பாடுபட்டுக்கொண்டிருந்தோம். மண் துகள்களை கம்பரசரிலிருந்து வரும் காற்றில் சேர்த்து  ஒரு சிறிய நாசில் மூலமாக பீச்சியடித்து கண்ணாடி மற்றும் மைக்கா ஷீட்டுகளில் துளைபோடுவது - harnessing non-conventional sources of energy, அந்த சப்ஜெக்ட் எடுக்கும் லெக்சரர்தான் எங்கள் பிராஜெக்ட் கைடு .  1995 பிப்ரவரி மாதம், முதல் வாரம்  புதன்கிழமை மதிய இடைவேளையில் நண்பர்கள் இன்று 7th செமஸ்டர் ரிசல்ட் வருகிறது என்று  பேசிக்கொண்டிருந்தார்கள். 3.30 மணி வாக்கில் காலேஜ் முடியும் நேரத்தில் டிபார்ட்மென்ட் நோட்டிஸ் போர்டில் ரிசல்ட் வெ...

Panorama பக்கம்

Amateur புகைப்படக்காரர்களுக்கு iPhone சில வேலைகளை சுலபமாக்கியுள்ளது, அதில்அருமையான ஒன்று Panoramio, சாதாரண கண் காணும் காட்சியை விட அகலமாக படம் எடுப்பது. இது புகைப்படத்திற்கும் புதிய  பரிமாணத்தை அளிக்கும். காட்சியும் புது வடிவம் பெற்று விவரமான தோற்றத்தை கொடுக்கும். நான் கிளிக்கிய சில panoramic view படங்கள் இங்கே.

ஓ.. பக்கம்

2004 நவம்பரில் ksrk எனது தம்பி மூலமாக எனக்கு அறிமுகம் , அவர் எழுத்தாளரும்கூட என்று அறிமுகம் செய்தான் . சில வருடங்கள் கழித்து அவருடைய வலைப்பதிவுகள் / கதைகள் படித்தேன் . அவருடைய வெப்ஸைட்டில் அவரின் டிவிட்டர் ஐடியைப் பார்த்து சரி நாமும் ட்விட்டரில் ஒரு கணக்குத் தொடங்குவோம் எனத்தொடங்கி பின்தொடர்ந்தேன் .  பின் ட்விட்டர் ரெகமெண்ட் செய்ய @elavasam கொத்தனாரைப் பின்தொடர்ந்தேன் . அவர் ட்விட்டுகள் ஜாலியா இருந்தது . பின் அவர் ஜாலியா தமிழ் இலக்கணம்னு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்று தெரியவந்தது . பள்ளியில் தமிழ் பாடத்தில் பல சமயம் க்ளாஸ் ஃபர்ஸ்ட் எடுத்துள்ளேன் , புலவர் மன்றத்தேர்வில் பள்ளியில் முதலாக வந்து பரிசெல்லாம் வாங்கியுள்ளேன் . பள்ளிப்படிப்பு முடிந்ததும் 1991 னோட தமிழ் இலக்கணம் , இலக்கியம் எல்லாம் விட்டுப்போய் மறந்துபோச்சு .  பதினெட்டு வருசம் கழித்து தமிழ் இலக்கணம் அதுவும் ஜாலியா கத்துக்கலாம்னு சொல்லுறாரேன்னு ஒரு ஆர்வம் வந்துடுச்சி , ஆனால் எப்படி அந்த புத்தகத்தை வாங்குறதுன்னு தெரியல . அப்ப நி...