![]() |
| சரவணன் & கார்த்தி |
சமீபத்தில் இன்னொரு நண்பன், வலசையூர் சீனிவாசன், இந்தியாவிலிருந்து இரண்டுவார பிசினஸ் ட்ரிப்பில் அமெரிக்கா வந்திருப்பதாகவும், Chicagoவில் தற்பொழுது இருப்பதாக என் போன் நம்பர் கேட்டு Facebookல் மெசேஜ் அனுப்பியிருந்தான், நம்பர் அனுப்பினேன், பேசினோம். அப்புறம் அவன் என் நம்பரை எங்க காலேஜ் whatsapp குரூப்பில் சேர்த்துவிட்டான். அதில் இந்தவருடம் சென்னையில் நடக்கவிருக்கும் எங்கள் பேட்ச் Silver Jubilee Get together மற்றும் நடக்கவிருக்கும் தேர்தல் பற்றி சூடாக நண்பர்கள் பரிமாறிக்கொண்டிருந்தனர் / கொண்டிருந்தோம்.
இந்த Silver Jubilee Get togetherரா இல்லை என்னன்னு தெரியல, இப்ப திரும்ப கார்த்தி போன் பண்ணினான், "ஒரு weekend familyயோட வாடா , weekendsல எப்படா நீ free"ன்னு கேட்டான், "sundays எல்லாம் நான் freeதான்"னு சொன்னேன். "வருகிற சண்டே freeயா, familyயோட என் வீட்ல மீட் பண்ணலாமா" என்றான். ஓகே சொன்னேன். "சரி ரெண்டு நாள்ல confirmமா சொல்றேன்"னான், நான் இந்தமுறை எப்படியும் மீட் பண்ணனுங்கிற முடிவில இருந்தேன். சனிக்கிழமை வரை எந்த மெசேஜும் இல்லை, சரி அடுத்த சண்டேதான் என நினைத்து தூங்கிப்போனேன். ஞாயிறு காலை, இன்றைக்கு டின்னர் எங்க வீட்டில்னு மெசேஜ் அனுப்பியிருந்தான். அடப்பாவி ஒன்னுமே வாங்கல, என்ன பண்றதுன்னு சரி இந்தமுறையும் தள்ளிப்போட வேணான்னு ஓகே சொல்லிட்டேன். என் மனைவியும் முதன்முதலா போறோம் ஏதாவது ஸ்வீட் எடுத்துட்டு போவோம்னு ஸ்வீட் செய்ய ஆரம்பிச்சிட்டா. நான் இருக்கிற countyல ஞாயிற்றுக்கிழமை கடைகள் திறந்திருக்காது - blue law - ஒன்லி அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள்தான் திறந்திருக்கும். சாயந்திரம் நாலு மணிக்கே வரச்சொல்லியிருந்தான், ஆனால் அஞ்சு மணிக்குதான் நான் என் வீட்டைவிட்டுக் கிளம்பினேன். Farmland - மாட்டுப்பண்ணை, குதிரைப்பண்ணையெல்லாம் கடந்து அவன் இருக்குமிடம் அடைந்தேன். நியூயார்க்லேர்ந்து நாற்பது மைல் தூரத்தில் இப்படியொரு இடமா..? GPS ஏதாவது தப்பான வழிகாட்டுதான்னு டவுட் வந்தது. அப்புறம் நிறைய புதிய வீடுகள் தெரிந்தது, ஒரு வழியாக வீட்டைக் கண்டுபிடுச்சி காரை நிறுத்தினேன்.
கார்த்தியும் அவன் மனைவியும் வெளியே வந்து வரவேற்றார்கள். நல்ல பெரியவீடு. அதே கார்த்தி, வயதால் சற்றே பூசியிருந்தான், பேசிக்கொண்டிருந்தோம், பேச்சிலும் பெரியமாற்றமில்லை, "உன் போட்டோஸெல்லாம் Facebookல பார்ப்பேன் நல்லாயிருக்கு" என்றான். சில காலேஜ் அனுபவங்களை, நினைவுகளை, அருமை பெருமைகளை மனைவிகளிடம் பகிர்ந்துகொண்டோம். அதில் ஒன்று, கார்த்தி இரவு எட்டு மணிக்கெல்லாம் தூங்கிடுவான், கோடி ரூவா கொடுத்தாலும் எட்டு மணிக்கு மேல முழிச்சிருக்கமாட்டான், கார்த்தி இன்றுவரை அதை கடைபிடிக்கிறான்.
அப்புறம் டின்னர், "veggie அயிட்டம் மட்டுந்தான் வீட்டுல செஞ்சிருக்கோம் non-veg restaurantலதான், வா.. கார்ல போய் எடுத்துட்டு வரலாம்னு" கூப்பிட்டான், "உனக்கு தூங்கிற டைம் ஆயிடுச்சி எதுக்குடா restaurantல்லாம்னு" சொன்னேன், "பரவாயில்லை வாடா"ன்னான், போனோம்.
போற வழியில நான், "நீ இதுக்கு முன்னாடி அஞ்சப்பர் ரெஸ்டாரண்ட் பக்கத்தில் இருக்கிறதால்ல சொன்ன, இங்க எப்படா வந்த" என்றேன். "இங்க வந்து மூனு வருசமாச்சுடா, அஞ்சப்பர் ரெஸ்டாரண்ட் இந்த வழியாகப் போனால் பக்கம்தான்" என்று சொல்லி ஒரு ரெஸ்டாரண்ட் முன் காரை நிறுத்தினான். "இறங்கு போய் சாப்பாடு எடுத்துட்டு போலாம்" னான். நான் "ஏன்டா.. அஞ்சப்பர் ரெஸ்டாரண்ட்தான் பக்கத்துல இருக்குன்னு சொல்ற, அங்க போய் வாங்கலாம்ல, எதுக்கு இங்க நிறுத்துற" என்றேன். "ஏன்னா.. இது எங்க ரெஸ்டாரண்ட், நான் இதுல பார்ட்னர்" என சிரித்தான். சர்ப்ரைஸ்!. அங்கு எங்களுக்காக ரெடியாக இருந்த bagஐ எடுத்துக்கொண்டு வந்தோம், சாப்பிட ஆரம்பித்தோம்.
சாப்பிடும்போது கேமரா பற்றிய டாபிக் வந்தது. என் புகைப்பட expertise பற்றி ஆரம்பித்தேன், D3100ல் தொடங்கி D7100, 18 - 300mm lens என என் புகைப்படஆர்வத்தின் நதிமூலம் ரிஷிமூலம் பற்றி அளந்துக்கொண்டிருந்தேன். "என்னைவிட என் மனைவிக்குதான் அதில் ஈடுபாடு" என்று அவன் சொல்லிக்கொண்டிருந்தான். அப்பொழுது அவன் மனைவி அவர்கள் சமீபத்தில் Alaska trip போய்வந்ததற்காக வாங்கியிருந்த கேமராவைக் கொண்டுவந்து காண்பித்தார், அடுத்த சர்ப்ரைஸ்!. அது D750 கேமரா, அடச்சே.. D750 வச்சிருக்கிற இவன்கிட்ட போய் நாம D7100 பற்றி சொல்றோமேன்னு கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தேன்.
"நீ எடுக்கிற photos எல்லாம் சூப்பரா இருக்கு, அந்த வித்தைய கொஞ்சம் சொல்றா"ன்னான். கரும்புத் தின்னக்கூலியான்னு ஆரம்பிச்சேன்... "எல்லாம் பழக்கம்தான்.. நூறு போட்டோ எடுத்தோம்னா அதுல பத்து போட்டோ தானாவே நல்லா வரும், அப்புறம் manual modeல flash இல்லாம natural லைட்ட வச்சே போட்டோ எடுக்கப் பழகிக்கனும்"னு அங்க snackஸா வச்சிருந்த மசால் வடையை போட்டோ எடுத்துக் காண்பிச்சேன்.
சின்னக்குழந்தையா இருக்கிறப்ப பாட்டி வடை சுட்டக்கதையைச் சொல்லி கிரியேட்டிவிட்டியை ஊட்டி வளர்த்தார்களே, அதுபோல நானும் அங்கிருத்த மசால் வடையை கிளிக்கி,"நாம புகைப்படம் எடுக்கிற கோணத்தோட சேர்த்து, shutter speed - aperture - ISO இந்த முக்கோணத்தோட ஒளியுடன் விளையாடினால், அதுதான் photography"ன்னு எனக்குத் தெரிந்த புகைப்படக்கலை(தை)யை விளக்கினேன். அப்புறம் அந்தக் கேமராவில் சில கிளிக்ஸ்.
![]() |
| மசால் வடை - with flash |
![]() |
| மசால் வடை - with ƒ/7.1, 1/80, ISO 2000 |
![]() |
| மசால் வடை - with ƒ/4, 1/125, ISO 2800 |
ஆகமொத்தம் நிறைவான சந்திப்பு. அப்புறம் கிளம்பும்போது ரெண்டு நாளைக்குத் தேவையான சிக்கன்65யும், சிக்கன் பிரியாணியும் கொடுத்துவிட்டான். அவனுடைய ரெஸ்டாரண்ட் iSpice சிக்கன்65 இப்ப என் பையனோட பேவரிட் லிஸ்டுல சேரந்திடுச்சி.
திரும்பி வரும்போது காரில் மனைவியிடம் "இதுவரைக்கும் நான் யார்கிட்டேயும் photography பத்தி இந்த அளவுக்கு பேசினதில்லை, அப்படியே பேசினாலும் யாரும் இந்த அளவுக்கு காதுகொடுத்து கேட்கமாட்டாங்க, ஆனா கார்த்தி பொறுமையா நான் சொல்றதையெல்லாம் கேட்டுக்கிட்டு இருந்தான், அதுதான் பழைய நட்புக்கும் புது நட்புக்கும் உள்ள வித்தியாசம்" என்றேன். மனதுக்குள் ஏதோ ஒரு சந்தோசம், நிம்மதி.




Comments
Post a Comment