Skip to main content

இளவேனில் இது வைகாசி மாதம்...

என்கிட்ட இருக்கிறதுலேயே இருக்கிற ஒரு நல்ல கெட்டப்பழக்கம் எங்கேயாவது கேட்கிற பாட்டு பிடிச்சிருந்தா போதும், எப்படியாவது டவுன்லோடி என் பேவரிட் லிஸ்டுல சேர்த்திடனும். பாட்டு கேட்குறது எல்லாருக்குமே பிடிச்ச விஷயம்தான், ஆனா எனக்கு அது ரொம்பரொம்பப்பிடிக்கும்.

அதுவும் நமக்குப்பிடிச்ச பாட்ட வரிசையா கம்பைல் பண்ணி கேட்கிறதே தனி ரசனைதான். ஒரு காலத்துல பயோடேட்டாவுல hobbiesனு போட்டு stamp  collection ,drawing, listening musicனு பாட்டு கேக்குறது வெறுமே hobbyயா தான் இருந்தது. ஆனா கடந்த பத்து பதினைந்து வருஷமா அன்றாட வேலையோட வேலையா சேர்ந்துபோச்சு. அதுவும் ஆபீசுல இந்த Bose noice cancelling ஹெட்போனை காதுல மாட்டிகிட்டு கேட்குற சொகமே தனி. 

எங்க அம்மா சொல்லுவாங்க, நான் குழந்தையாக இருக்கிறச்சே பக்கத்துல ரேடியோவ வச்சுட்டா சமத்தா அழாம பாட்டு கேட்டுக்கிட்டே படுத்திருப்பேனாம், அங்கேயிருந்துதான் ஆரம்பிச்சியிருக்கணும். 

சின்ன வயசுலலாம் எப்பயாச்சும் ரேடியோவுல பிடிச்ச பாட்டு போட்டா சத்தமா வச்சு கேட்டுக்கறதோட சரி, ரஜினியோட ரங்கா படத்துல 'பட்டுக்கோட்டை அம்மாளு'ன்னு ஒரு பாட்டு வரும், அந்த பாட்ட சத்தமா வச்சு கேட்போம். சில சமயம் வீட்டுல இரவு டியூப் லைட் low voltageல மினுக் மினுக்னுதான் எரியும் நானும் என் தம்பியும் அத டிஸ்கோ லைட்டா பாவிச்சு  'ஆசை நூறு வகை' , 'வா வா பக்கம் வா'ன்னு ஆட ஆரம்பிச்சுடுவோம். சின்ன வயசுல ரஜினி ரசிகனா இருந்து வயசாக வயசாக கமல் ரசிகனா மாறிட்டேன்.

 இந்த டேப்ரிகார்டர் வந்த புதுசுல லீவுக்கு எங்க தாத்தா வீட்டுக்குப்  போறப்போ எங்க சிவா மாமா சகலகலா வல்லவன் பாட்டை போட்டு  'தகதகதகதகதக தகத்தா..'ன்னு டைனிங் டேபிள் மேல ஏறி ஆட ஆரம்பிச்சுடுவாரு,  அதேமாதிரி சலங்கை ஒலி பாட்டை வச்சு 'திரண திரணணண தகிட தகிட திமின்னு' ஹால்ல ஆட ஆரம்பிச்சுடுவாரு, அத பாத்துட்டு அப்பாகிட்ட நம்ம வீட்டுக்கும் ஒரு டேப்ரிகார்டர் வாங்கணும்னு கோரிக்கை வச்சோம்.

அப்புறம் திருச்சியில நான் நைன்த் ஸ்டேண்டர்டு படிக்கும்போதுதான்  வீட்டுல டேப்ரிகார்டர் வந்தது - Panasonic, வீட்டு ஓனருடைய சொந்தக்கார் ஒருத்தர் துபாயிலேர்ந்து வாங்கிவந்தது. ஒரு JVC கேசட்டும், இரண்டு TDK கேசட்டும் பர்மா பசாருல வாங்கி, ஒரு வாரமா பாட்டு லிஸ்ட் ரெடி பண்ணி  - JVC கேசட்டுல பக்தி பாட்டு, TDK கேசட்டுல சினிமா பாட்டு - ரிகார்ட் பண்ணுனோம், அந்த JVC பக்திபாடல் கேசட்ட இன்னும் என் தம்பி வச்சிருக்கான்.  அப்ப ஆரம்பிச்சுது இந்த பாட்டு கலெக்சன்.

பத்தாவது படிக்கிறப்ப திருச்சி பொன்மலைலேர்ந்து வர்ற  என் friend ராஜேஷ் நிறைய இங்கிலீஷ் கேசட் கொடுப்பான், அங்க Anglo Indians அதிகமா இருப்பாங்க, Michael Jackson -Thriller, Boney M, Snap, Madonna, George Michael எல்லாம் அவன் மூலமாத்தான் அறிமுகம், அவனால இங்கிலீஷ் பாட்டும் கேட்க ஆரம்பிச்சேன். Tezaab / Qayamat se Qayamat Tak வந்தப்ப மெல்ல இந்தி பாட்டும் சேர்ந்துடுச்சு. திருச்சி சிங்காரத்தோப்புல 10ரூபாய்க்கு கேசட் கிடைக்கும், பல கேசட்டுகள் அங்கதான் வாங்கினேன். 11th ஸ்டாண்டர்டு படிக்கறப்ப பக்கத்து வீட்டுல குமரன்னு ஒரு friend, கொழும்புலேர்ந்து வந்திருந்தான், அவன் மூலமா MJ Bad - way you make me feel, Liberian Girl தெரிஞ்சிகிட்டேன். ஹைஸ்கூல் பருவத்துல இப்படி  நண்பர்கள் மூலமா பாட்டு கலெக்சன் வளர்ந்துச்சு.

அப்படித்தான் final year காலேஜ்டேயில ரெண்டு 3rd year தெலுங்குபசங்க Meghabooba -Bollywood flashback, Bally Sagoo பாட்டுக்கு ஆடுனாங்க, பயங்கர கிளாப்ஸ், ஆடும்போது நடுவுல கரண்ட் கட் ஆயிடுச்சு, அதனால திரும்பவும் முதலேர்ந்து ஆடுனாங்க, திரும்பவும் பயங்கர கிளாப்ஸ். ஆடுனதுல ஒருத்தன் என் பக்கத்து ரூம். அவன்கிட்ட அந்த ஆல்பம் என்னன்னு கேட்டுத்தெரிஞ்சுகிட்டேன். அதுக்கடுத்தமாசம் மவுன்டரோடு தேவி தியேட்டர்ல பம்பாய் படம் பார்த்துட்டு வெளியே வரும்போது அங்க முன்னாடியிருந்த கேசட் கடையில அந்த ஆல்பம் கண்ணில்பட்டது, அவ்வளவுதான் - வாங்கியாச்சு. அந்த ஆல்பத்துல இருக்கிற Yeh Sama, Chura liya, O Sathi Re பாட்டுகள் என்னோட all time favorite ஆயிடுச்சி, பாட்டு அர்த்தம் புரியாது ஆனா கேட்க நல்லா இருக்கும், இப்பவும் ஆபிசுல வேலை செய்யும்போது ரொம்ப disturbanceசா இருந்தா இந்த பாட்ட சத்தமா வச்சு வேலையில மூழ்கிடுவேன்.

அதே final year படிக்கும்போது DD Metroல சாயந்திரம் இங்கிலிஷ் music videos போடுவானுங்க, அப்ப பார்த்து தெரிஞ்சு பிடிச்சதுதான் இந்த Enigma, Ace of Baseல்லாம்.

காலேஜ் முடிச்சதுக்கப்புறம் வீட்டுக்குக் கேபிள்டிவி கனெக்சன், அப்பதான் நம்ம ஊரில கேபிள்டிவி பிறந்து வளர்ந்தகாலம், சானல் பிரவுசிங்கெல்லாம் கத்துக்கட்ட காலம். MTV, Channel V, Sun Musicனு தவம் இருந்த காலமது. மேட்டூர்ல வேலை கிடைச்சு முதல்மாச சம்பளத்துல நான் வாங்கியது Sony Walkman, அதுலயும் முதல் கேசட் போட்டுக்கேட்டது channel V hits. Indy pop music பிரபலமான காலமும் அதுதான்.

அப்பெல்லாம் சேலம் சங்கீத் தியேட்டர்ல இண்டர்வெல்ல  Alisha chenoyயோட Made in India பாட்ட DTSல போடுவாங்க, இண்டர்வெல்ல பெரும்பாலும் எல்லாரும் எழுந்து போயிடுவாங்க, ஆனா நான் மட்டும் அந்த பாட்ட கேட்டுட்டுதான் எந்திருப்பேன். அப்புறம் அந்தப்பாட்ட DTSல கேட்கணும்னே அங்க போக ஆரம்பிச்சேன்.

அப்படி சேலத்திலிருந்து திரும்பும்போது இரவு 9 மணிக்கு வானவில் ட்ரான்ஸ்போர்ட்ஸில்தான் பெரும்பாலும் திரும்புவேன், பஸ் சுத்தமாக இருக்கும், ஸ்டாண்டிங் டிக்கட் ஏற்றமாட்டார்கள், நடுவில் எங்கும் நிறுத்தமாட்டார்கள், சேலம் ஏறினால் மேட்டூர்தான், மேலும் காட்டுக்கத்து கத்தாத ஸ்பீக்கரில் 90களில் வெளிவந்த ஹிட் சாங்ஸ்தான்.

மேட்டூர் இராமன் நகர்ல ஒரு வீட்டு முன்னாடியிருந்த ரூம்ல வாடகைக்குத் தங்கியிருந்தேன், வீட்டு ஓனரோட தம்பி டீக்கடை, ஹோட்டலுக்கெல்லாம் ஆடியோ செட்டெல்லாம் அசெம்பிள்பண்ணி விக்கறவர், அவரும் ஏதாவது புது செட் அசெம்பிள் பண்ணும்போது எனக்கு போட்டுக்காட்டுவார். Woofer, sub-woofer, tweeter, bassல்லாம் அப்போ தெரிஞ்சிகிட்டது.

1997ல உளுந்தூர்பேட்டையில இருந்தப்ப அருணகிரி மாமாவும், குமார் மாமாவும் திருப்பதிக்கு போறவழியில வீட்டுக்கு வந்தாங்க, நீயும் வரியாடானு சொன்னப்ப நானும் அவங்ககூட கிளம்பினேன், அப்போ  சுமோ வேன்ல கேட்ட பாட்டுதான் காதல் ரோஜாவே, அடுத்த வாரமே மேட்டூர் பஸ் ஸ்டாண்டுல இந்த கேசட் கண்ணுல பட்டுச்சு வாங்கிட்டேன்.

அப்புறம் லேட் ninetiesல  மெட்றாசுக்கு ஜாகை மாத்தியாச்சு, Indy  pop பிரபலமான காலம், Yaad piya kiya - Falguni Pathak, Aika Dajiba - Vaishali Samant எல்லாம் நம்ம கலெக்சன்ல சேர்ந்தாங்க.
வீட்டுல டேப் ரிகார்டரிலிருந்து Philips 3இன்1க்கு மாறி அப்புறம்  AIWA VCD Home தியேட்டர் வந்துடுச்சு, மெட்றாஸ் வர்றப்ப நுங்கம்பாக்கம்/கோடம்பாக்கம்  ஹைரோடு சந்திப்புல கோமளாஸ் பக்கத்துல  ஒரு கடையில அப்போ 20ரூபாய்க்கு VCDs கிடைக்கும், அங்க அப்பப்ப போயி  புடிச்சதுதான் இந்த MJ 1995 MTV Awards Performance, friends யார் வீட்டுக்கு வந்தாலும் இந்த VCDய போட்டு பெரிய படம் காட்டிடுவோம்.


அப்புறம் TTK ரோட்ல ஏவிஎம் மியூசிக் ஹால்னு நினைக்கிறேன் அங்க கொஞ்சம் CD / VCD விலை கம்மியா கிடைக்கும். அங்க ஒரு நல்ல ஹிந்தி collection மாட்டுச்சு.

Venga Boys ஆல்பம் பிரபலமா இருந்தப்ப அவங்க மெட்றாஸ் வந்திருந்தாங்க, ராயப்பேட்டை மைதானத்துலதான் நிகழ்ச்சி friendsசோட போயி சரியான ஆட்டம்.

இண்டர்நெட் வந்ததுக்கப்புறம் டவுன்லோட வேண்டியதுதான்,  cooltoadன் பங்களிப்பு அதில் நிறைய உண்டு ஆனா இப்போ அதுல புது பாட்டு ஒன்னும் கிடைக்க மாட்டேங்குது .

ஒரு முறை கலிபோர்னியாவுல South Coast Plazaல Levis showroomல window shopping பண்ணிட்டிட்டு இருக்கிறப்ப ஒரு பாட்டு என்னமோ வசியமா இழுத்துச்சு, உடனே அங்கிருந்த சேல்ஸ் கேர்ள்கிட்ட அது என்ன பாட்டு, என்ன ஆல்பம்னு கேட்டேன், Black  Eyed Peasஸோட My Humpன்னு   ஏற இறங்க பாத்துட்டு கடுப்பா சொன்னா, வீட்டுக்கு வந்து டவுன்லோடி கொஞ்சம் நாளைக்கு அப்புறம்தான் புரிஞ்சுது அது டபுள் - ட்ரிப்பிள் மீனிங் பாட்டுன்னு.

2005ல முதல்முறை அமெரிக்காவிலேர்ந்து இந்தியா திரும்பி வர்றப்ப மெட்ராஸ் to  திருச்சி KPN பஸ்ல போகும்போது திண்டிவனத்துக்கிட்ட அறைதூக்கத்துல இருந்தப்ப இந்த பாட்டு காதுல விழுந்தது, கண் பேசும் வார்த்தைகள்.. 7G Rainbow colony, இந்த படம் பார்த்துட்டுதான் அமெரிக்கா கிளம்புனேன், ஆனா அப்போ எந்த பாட்டும் அதுல புடிக்கல, சில பாட்டுகள் பார்க்கிறதவிட கேட்கதான் நல்லா இருக்கும், அந்த ரகம் இது.

அதே vacationல ஒரு ஞாயிறு காலைல வீட்டுல மாடியிலேர்ந்து கீழ இறங்கி வர்றப்ப சப்தஸ்வரங்கள்ல உனக்கென இருப்பேன்னு.. காதல் படத்துலேர்ந்து அந்த பாட்ட பாடுனவரு உச்சஸ்தாயில பாடிட்டு இருந்தாரு, அப்ப புடிச்சது, அந்த பாட்டுல கடைசியில உனக்கு முன் இறப்பேன்னு  இழுக்குறப்ப Saxfone வந்து ஒரு இழுஇழுக்கும்.. சான்ஸே இல்ல.

 அப்புறம் Pittsburghல வேலை பார்க்கும்போது அங்க ஒரு friend கார்ல கேட்டு புடிச்ச பாட்டுதான் இந்த Promiscuous

New Jersey வந்த புதுசுல ஆபீஸுக்கு commute பண்றதுக்கு ஒரு தெலுங்கு நண்பர்கூட carpool பண்ணுவேன் அப்போ அவர் daily காலைல Ganesha Symphonic Chants cd போடுவாரு, அவருகிட்ட முதல் வாரமே அந்த CDய கொஞ்சம் தர்றீங்களான்னு வாங்கி காப்பி பண்ணிட்டேன்.

நாலு வருசத்துக்கு முன்னாடி dentist officeல காத்திருக்கும்போது Ashley Tisdaleயோட Last Christmas பாட்டு ரேடியோவுல பாடிட்டு இருந்துச்சு, நல்ல வேளை  Last  Christmasன்னு words  easyயா காதுல விழுந்ததால நானே search  பண்ணி டவுன்லோடிட்டேன், dentistகிட்ட கேட்க வேண்டிய அவசியம் ஏற்படல.

அப்பா அம்மா மணிவிழாவுக்காக ஊருக்கு வந்தப்ப மெட்றாஸ்  RK சாலை நீல்கிரிஸ் ஹோட்டல்ல மதியம் சாப்பிடுறப்ப இயேசுதாஸ் Instrumental  songs  பாடிட்டு இருந்துச்சு, அந்த சர்வர்கிட்ட அது என்ன CD எங்க கிடைக்கும்னு கேட்டேன், CD  கொண்டு வந்து காமிச்சு, "வேணும்னா copy  பண்ணிட்டு கொடுங்க" என்றார், ரூமுக்கு வந்து லேப்டாப்புல copy பண்ணிட்டு அவருக்கு டிப்ஸ் கொஞ்சம் சேர்த்து கொடுத்துட்டேன் .

2007ல கார் வாங்குறப்ப Camryல MP3 player  இல்லன்னு Jetta வாங்குனேன், ஒருமுறை ஆபிசுலேர்ந்து வரும்போது அந்த கார்ல FMல கேட்டு புட்ச்சு போனதுதான் Konvict.

சில வருசங்களுக்கு முன்னால ஒரு சனிக்கிழமை காலைல MTV Jump Startல Taylor Swiftடோட Love Story முதமுறை பார்த்தப்பவே புடிச்சுபோயிடுச்சு.

ஒபாமா பதவியேற்பு வரவேற்பு நிகழ்ச்சிய டிவியில காட்டுறப்ப, Everything is gonna be alright - ஒ ஒ ஒ ஒ ஓ ஓ ஓ ஓன்னு Alicia Keys பாடிட்டு இருந்தாங்க அப்ப புடிச்சு போயி புடுச்சதுதான் No One.

அப்புறம் இந்த விஜய் டிவி புண்ணியத்துல பல அருமையான பழைய தமிழ் பாடல்களைத் திரும்ப கேட்கும் வாய்ப்பு கிடைச்சுது, அனுராதா ஸ்ரீராம் நடத்துன ஒரு பாட்டுபாட வா நிகழ்ச்சியில ரஜினியோட ப்ரியா படத்துலேர்ந்து 'ஏ.. பாடல் ஒன்று' பாட்டு, சிறுவயதில் பலமுறை ரேடியோவில் கேட்டிருந்தாலும் இப்பதான் வரிகளின் அர்த்தம் முழுமையாக புரிகிறது.
 அது மாதிரி சூப்பர் சிங்கர்ல S.P.ஷைலஜா பாடுன ஆயிரம் மலர்களே - but originalஆ பாடுனவங்க வேற, பூந்தளிர் ஆட பாடல்கள்  திரும்பத்திரும்ப கேட்க வச்சது.

இப்படியே நம்ம favorite பாட்டு கலெக்சன் வளர்ந்துகிட்டேயிருக்கு... சரி இப்போ அதுக்கு என்ன அப்படின்னு கேட்குறீங்களா? இப்படி அடுத்துவங்ககிட்ட கேட்டு புடிச்சி தெரிஞ்சு வாங்குன காலம் மாறி இப்போ இந்த ஸ்மார்ட்போன் apps சுலபமாக்கிடுச்சு.. எங்கேயாவது காதுல கேட்கிற பாட்ட இது என்ன பாட்டுன்னு போன் பட்டன அழுத்தி கேட்டா போதும் அந்த பாட்டோட ஹிஸ்டரி ஜியாகிரப்பி எல்லாம் கொடுத்திடும், அப்படி சில மாதங்களா window  shopping பண்றப்ப காதில் விழுந்த பாட்ட தேடிகிட்டு இருந்தேன் போன மாசம் Siri இந்த மூனு பாட்டையும் கண்டுபிடுச்சு கொடுத்துச்சு Pharrell Williams - HappyMAGIC Rude, Duffy - Mercy .

இன்னும் இந்த அழகு ஆயிரம் - உல்லாசப்பறவைகள், சித்திரச்செவ்வானம் - காற்றினிலே வரும் கீதம்  போல என் லிஸ்டுல சில பழைய பாடல்கள் நல்ல qualityல கிடைக்கல, யாருகிட்டாயாவது இருந்தா ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க.

Comments

Popular posts from this blog

வெள்ளிச்சலங்கைகள்...

பொதுவாக அமெரிக்காவில் சாமானியனுக்கு எல்லாமே  எளிதில் எட்டும், இந்திய பொருள்கள், கலைகள்  உட்பட.  உதாரணமாக எந்த ஒரு புதிய‌ திரைப்படத்தையும்  முதல் நாளில்  எளிதில் பார்த்துவிடலாம், உயர்ரக மாம்பழங்கள் எப்பொழுதும் சாப்பிடலாம், இன்னும் இங்கே முனியாண்டி விலாஸ் கொத்து பரோட்டாவும் சால்னாவும் மட்டும்தான் வரவில்லை. வடக்கிந்திய, தெற்கிந்திய பொருட்கள் ஆடை ஆபரணங்கள் பெரும்பாலும் எங்கும் கிடைக்கும். இன்னும் இந்திய இதிகாச / வரலாற்று நாடகங்களுக்கான மேக்கப் சாதனங்கள் கூட கிடைக்கும். தமிழ் நாட்டில் சற்று பெரிய நகரமான திருச்சியில்கூட இவையெல்லாம் நினைத்தால்  கிடைக்காது, சரி.. சரி.. விஷயத்துக்கு வருவோம். நண்பர் ஒருவர் சில வாரங்களுக்கு முன்னால் "பிரபாவதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீங்களா, அது ஒரு இந்திய‌ கிளாசிக்கல் டான்ஸ் ஷோ, ப்ராட்வே ஷோ மாதிரி இங்கு நடத்துறாங்க,அதில் கிடைக்கும் பணம் AIM for SEVA - இந்திய குழந்தைகளின் கல்வி மற்றும் நலனுக்காக சென்றடைகிறது " என்றார். "சரி பார்க்கலாம்" என்று சொல்லியிருந்தேன். சென்ற ஞாயிறு காலை திடீரென்று அவர் வீட்டுக்கு வந்து, " வரும

என்று தனியும் இந்த சுதந்திர தாகம்..

Band சத்தம் எங்கே கேட்டாலும் அப்படியே என்னை ஈர்க்கும் , அதில் லயிச்சு அங்கேயே நின்றிடுவேன் . இந்த band, March-past ற்கும் எனக்கும் சிறுவயதிலேயே சின்னத்தொடர்பு உண்டு . சிறுவயதில் திருச்சி காஜாமலை காலனியில் இருக்கும்போது எங்கள் வீட்டருகில்தான் Railway Protection Force பயிற்சி மையம் , பொதுவாக ஷூட்டிங் கிரவுண்டு என்போம் . இந்த March-past அணிவகுப்பு , rehearsal லெல்லாம் விடியற்காலைகளில் எங்கள் வீட்டின் முன்னிருக்கும் சாலையில்தான் நடக்கும் . வீட்டு பால்கனியிலிருந்து பார்ப்போம் . தார்ரோட்டில் கம்பீரமாய் வீரர்கள் சீராய் நடக்கும்போது அந்த பூட்ஸ்களிலிருந்து எழும் ஒலிகள் இன்னும் காதில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது .  அப்புறம் விருத்தாசலத்தில் எட்டாங்கிளாஸ் படிக்கும்போது நான்தான் க்ளாஸ் லீடர் ☺️☺️ . March-past ல் எங்கள் க்ளாஸை வழிநடத்திச் சென்றேன் . அந்த அனுபவமும் உண்டு . அப்புறம் அவ்வளவுதான் எல்லாம் மறந்துபோயாச்சு .  நியூயார்க் வந்தபிறகு Thanksgiving Parade பற்றி கேள்விப்பட்டு மூன்றுமுறை அருகில் நின்று பார்க்க முயன்று

சித்திரச் செவ்வானம்... சிவக்கக்கண்டேன்

Panoramic view of Bear Mountain range from Perkins Observatory நியூயார்க்கில் சுற்றிப்பார்க்க பல இடங்கள் உள்ளது , அதுபோல Newyorkers & Tri-state (Newyork, New Jersey, Connecticut பகுதி) மக்கள் சுற்றிப்பார்க்க மிக அருகில் இருக்கும் ஒரு recreational area, Bear Mountain - Harriman State Park. இது Tri-State area-வின் மத்தியில் இருக்கும் ஒரு வனாந்திரப்பகுதி - woodlands. நான் வேலை பார்க்கும் அலுவலகத்திலிருந்து பார்க்கும் தூரத்திலிருக்கிறது. Hessian Lake  அனைத்து சீசனிலும் இங்கு செல்லலாம். Camping, trekking, picnic and skiing என்று மக்கள் எப்பொழுதும் செல்லும் இடம். Bear Mountain-ல் சுற்றிப்பார்க்க பல இடங்கள் இருந்தாலும் Hessian Lake area, Seven Lakes Drive, Perkins Observatory மற்றும் நம்ம ஆட்களுக்காக மலையின் அடிவாரத்திலிருக்கும் Pomona Renganathar Temple ஆகியவை முக்கியமான இடங்கள். Queue to get Beers New Jersey வந்த புதிதில் ஆபீஸ் நண்பர்கள் Fall colors பார்க்க Bear Mountain போறோம் என்றார்கள், நானும் சென்றேன், முதன் முதலாக Hessian Lake area-க்கு, Palisades Parkway(No