Skip to main content

பச்சை நிறமே.. பச்சை நிறமே..



அமெரிக்காவில் காலடி வைத்து சரியா பத்து வருசம் ஆச்சு. 2004 நவம்பர் 14 மாலை, டெட்ராய்ட் - மெக்நமாரா ஏர்போர்ட, flight 5மணி நேரம் லேட், காலையில் ப்ராங்ஃபர்ட்டில் சாப்பிட்ட சீஸ்-சாண்ட்விச்சும், மதியம் ஃப்ளைட்டில் கொடுத்த டர்க்கி சாண்ட்விச்சும் வயிற்றை என்னவோ செய்து கொண்டிருந்தது. சரியான தூக்கம் இல்லாததால் டயர்டாக இருந்தது. இமிக்ரேஷனில் என்ன கேட்கப்போகிறார்களோ என்று எண்ணிக்கொண்டே ஹான்ட் லக்கேஜை எடுத்துக்கொண்டு எல்லோரையும் பின் தொடர்ந்து ஏர்போர்ட்டின் உள்ளேயே அரை கிலோமீட்டர் நடந்த பிறகு செக்யூரிட்டி ஆபிசர்கள் அங்கிருந்த வெவ்வேறு இமிகிரேஷன் வரிசைகளில் நிற்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தனர். 

ஒரே சமயத்தில் நான்கு ஃப்ளைட் வந்திறங்கியதால் நல்ல கூட்டம், மேலும் பத்து கவுன்டர்கள் திறந்தனர், ஆறடிக்கும் மேலாக கனத்த உருவத்துடன் பலர் கருப்பு ஃபுல் வின்டர்கோட் அணிந்து முன்னே வரிசையில் நின்று கொண்டிருந்தனர்,  என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை, சற்றே மிரட்சியாக இருந்தது. என் முறை வந்தது, "உன் கம்பெனி பெயர் என்ன?", "நீ என்ன வேலை செய்ய போகிறாய்?" என்று இமிகிரேஷன் ஆபிசர் கேள்வி கேட்டார், சொன்னேன், இரண்டு ஆள்காட்டி விரல் ரேகையையும் பதிவெடுத்துவிட்டு, கேமராவை பார்க்கச் சொன்னார், முகத்தையும் படம் எடுத்துவிட்டு, "வெல்கம் டு அமெரிக்கா" என்று பாஸ்போர்ட்டை திருப்பிகொடுத்து உள்ளே செல்லச்சொல்லி ஒரு புன்னகைவிடுத்தார். தம்பி வெளியே என்னை receive பண்ண Indianapolisசிலிருந்து வந்திருந்தான், Detroit to Indianapolis கிட்டதட்ட சென்னையிலிருந்து மதுரை தூரம்.

Checked baggage-ஐ எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன், என்னை பார்த்து கையசைத்தான், மனதில் ஒரு தற்காலிக திருப்தி. "என்ன flight லேட்டா?" என்று கேட்டுக்கொண்டே ஒரு லக்கேஜை எடுத்துகொண்டான், பிறகு கார் ட்ரங்க்கில் வைத்துவிட்டு, ஏர்போர்ட்டைவிட்டு கம்பெனி கெஸ்ட் ஹவுசுக்குக் கிளம்பினோம்,  வெளியே வரும்போது இருட்டத்தொடங்கியிருந்தது. பிறகு கைபேசியிலிருந்து ஃப்ளோரிடாவில் இருக்கும் cousin sister-க்கு ஃபோன் போட்டுக்கொடுத்து பேசு என்றான், பேசினேன். அமெரிக்க சாலைகள் நான் சினிமாவில் பார்த்ததுபோல் இல்லை, அழுக்காக வெறிச்சோடியிருந்தது. Guest Houseல் யாரும் இல்லை, அதன் சாவி கம்பெனி HR மேனேஜர் ரமேசிடம்  இருந்தது, அவர் வீட்டிற்குச் சென்று சாவியை வாங்கிக்கொண்டு, Guest house வந்தோம் - அது ஒரு அபார்ட்மெண்ட் .

நல்ல குளிர்,  உடல் விடாமல் நடுங்கியது, பெட்டிகளை இறக்கி அபார்ட்மெண்டில்  வைத்துவிட்டு, கிச்சனைப் பார்த்தோம், முன்னே தங்கியிருந்தவர்கள் வைத்துவிட்டு போன மிச்ச மீதி அரிசி பருப்பும், பாத்திரங்களும் இருந்தது. இந்தியாவிற்கு போன்போட்டு அம்மாவிடமும், மனைவியுடனும் பேசினேன். அருகில் உள்ள gas stationனில் ஏதாவது இருக்குதா என்று பார்ப்போம் என்று தம்பி சொன்னான், சளி பிடித்திருந்தது, nyquil மற்றும் சில cookies, bread and வாழைப்பழம் வாங்கிவந்தான். நைட் இதை வைத்து manage  பண்ணிக்கோ காலையில் ரமேஷ் உன்னை groceryக்கு கூப்பிட்டு போவார் என்று சொல்லிவிட்டு, நாளைக்கு call பண்றேன், பாத்துக்க என்று சொல்லிவிட்டு Indianapolisக்கு கிளம்பிவிட்டான். இரவு மணி 11.30 குளிர் தாங்கமுடியவில்லை நடுக்கம் குறையவில்லை, வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு Nyquil ஒரு மூடி குடித்துவிட்டு படுத்தேன், காலையில் 9 மணிக்கு ரமேசு வந்தார், thermostat எப்படி ஆப்பரேட் செய்யனும், எந்தெந்த பொருள் எங்கேயிருக்கு என்று சொல்லிவிட்டு சென்னையிலிருந்து அவருக்காக எடுத்துவந்திருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு "ரெடியானவுடன்போன் பண்ணுங்க  நான் வந்து ஆபிசுக்கு கூட்டிட்டு போறேன் " என்று சொல்லி சென்றார்,  ஜூரம் பிடித்திருந்தது, குளிருக்கு இதமாக ஒரு காபிபோட்டு குடித்தேன், குளித்துவிட்டு  ஊரிலிருந்து எடுத்துவந்த Calpol ஒன்றை போட்டுக்கொண்டு அருகில் இருக்கும் ஆபிசுக்கு சென்றேன், ரமேசு எல்லோரையும் அறிமுகப்படுத்தினார், பின் ஒரு கம்ப்யூட்ட்டரில் உட்கார வைத்துவிட்டு, நாளைக்கு சோசியல் செக்யூர்ட்டி ஆபிஸ் போய் SSNக்கு அப்ளை பண்ணுவோம் என்றார், பின் சில நண்பர்களுக்கு அவர்களுடைய போன் நம்பர் கேட்டு மெயில் அனுப்பிவிட்டு guest house திரும்பினேன். 

ஒரு calpolம் amoxylinம் போட்டுக்கொண்டு, அங்கிருந்த electric cookerல் சாதம் வைத்துவிட்டு, கேஸ் ஸ்டவ்வில் குக்கரில் பருப்பு வைத்துவிட்டு டிவியை ஆன் பண்ணினேன், ஒரு roomக்கான காசு கொடுத்தால் போதும் இரண்டு roomக்கு கார்பெட் போட்டுத்தருவோம் என்று Empire Today விளம்பரத்தில் ஒரு தாத்தா சொல்லிக்கொண்டிருந்தார். பதினைந்து நிமிடம் கழித்து பருப்புசாதம் ரெடி சாப்பிட்டுவிட்டு ரூமில் படுத்தேன். போன் அடித்தது, தம்பி பேசினான் விடியற்காலை 5மணிக்கு போய் சேர்ந்ததாகவும், அவனிடம் கொடுத்த லக்கேஜில் இரண்டு புளிக்காய்ச்சல் டப்பாவும் இருக்கு, உனக்கு வேற உடம்பு சரியில்ல சமைக்கக் கஷ்டப்படுவ ஓவர்நைட் Fedexல் அனுப்பி வைக்கிறேன் என்றான். தலைவலியும் ஜுரமும் அதிகமானது.

--- பச்சையின் இச்சை அடுத்த பதிவில் தொடரும் 

Comments

Popular posts from this blog

திருத்தறசாமி !!!

 பொறியியல் இளங்கலை இறுதியாண்டு -இயந்திரவியல், 8வது செமஸ்டர், 66% எந்த அரியர்ஸும் இல்லை - all clear.  இன்னும்  3 மாதங்களில்  Engineer!. மாமாவிற்கு தெரிந்த நண்பர்கள் வேலை  செய்யும் கம்பெனிகளில் ஏறி இறங்கி கம்பெனி ப்ராஜெக்ட் எதுவும் கிடைக்காமல் நண்பன் சடாச்சரதிற்கு தெரிந்த திருநெல்வேலி நண்பனிடமிருந்து எடுத்து வந்த ஒரு ப்ராஜெக்டை சற்று வித்தியாசமாக மாற்றி பைனல் இயர் ப்ராஜெக்டை முடிக்க பாடுபட்டுக்கொண்டிருந்தோம். மண் துகள்களை கம்பரசரிலிருந்து வரும் காற்றில் சேர்த்து  ஒரு சிறிய நாசில் மூலமாக பீச்சியடித்து கண்ணாடி மற்றும் மைக்கா ஷீட்டுகளில் துளைபோடுவது - harnessing non-conventional sources of energy, அந்த சப்ஜெக்ட் எடுக்கும் லெக்சரர்தான் எங்கள் பிராஜெக்ட் கைடு .  1995 பிப்ரவரி மாதம், முதல் வாரம்  புதன்கிழமை மதிய இடைவேளையில் நண்பர்கள் இன்று 7th செமஸ்டர் ரிசல்ட் வருகிறது என்று  பேசிக்கொண்டிருந்தார்கள். 3.30 மணி வாக்கில் காலேஜ் முடியும் நேரத்தில் டிபார்ட்மென்ட் நோட்டிஸ் போர்டில் ரிசல்ட் வெ...

Panorama பக்கம்

Amateur புகைப்படக்காரர்களுக்கு iPhone சில வேலைகளை சுலபமாக்கியுள்ளது, அதில்அருமையான ஒன்று Panoramio, சாதாரண கண் காணும் காட்சியை விட அகலமாக படம் எடுப்பது. இது புகைப்படத்திற்கும் புதிய  பரிமாணத்தை அளிக்கும். காட்சியும் புது வடிவம் பெற்று விவரமான தோற்றத்தை கொடுக்கும். நான் கிளிக்கிய சில panoramic view படங்கள் இங்கே.

ஓ.. பக்கம்

2004 நவம்பரில் ksrk எனது தம்பி மூலமாக எனக்கு அறிமுகம் , அவர் எழுத்தாளரும்கூட என்று அறிமுகம் செய்தான் . சில வருடங்கள் கழித்து அவருடைய வலைப்பதிவுகள் / கதைகள் படித்தேன் . அவருடைய வெப்ஸைட்டில் அவரின் டிவிட்டர் ஐடியைப் பார்த்து சரி நாமும் ட்விட்டரில் ஒரு கணக்குத் தொடங்குவோம் எனத்தொடங்கி பின்தொடர்ந்தேன் .  பின் ட்விட்டர் ரெகமெண்ட் செய்ய @elavasam கொத்தனாரைப் பின்தொடர்ந்தேன் . அவர் ட்விட்டுகள் ஜாலியா இருந்தது . பின் அவர் ஜாலியா தமிழ் இலக்கணம்னு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்று தெரியவந்தது . பள்ளியில் தமிழ் பாடத்தில் பல சமயம் க்ளாஸ் ஃபர்ஸ்ட் எடுத்துள்ளேன் , புலவர் மன்றத்தேர்வில் பள்ளியில் முதலாக வந்து பரிசெல்லாம் வாங்கியுள்ளேன் . பள்ளிப்படிப்பு முடிந்ததும் 1991 னோட தமிழ் இலக்கணம் , இலக்கியம் எல்லாம் விட்டுப்போய் மறந்துபோச்சு .  பதினெட்டு வருசம் கழித்து தமிழ் இலக்கணம் அதுவும் ஜாலியா கத்துக்கலாம்னு சொல்லுறாரேன்னு ஒரு ஆர்வம் வந்துடுச்சி , ஆனால் எப்படி அந்த புத்தகத்தை வாங்குறதுன்னு தெரியல . அப்ப நி...