Skip to main content

A Bose is a Bose is a Bose.. Bose

அப்பொழுதெல்லாம் எங்க வீட்டில் கருப்பு Panasonic transistor radio-தான் home entertainment, அப்பா - அம்மா கல்யாணத்தின் போது வாங்கியது. காலையில் பக்தி பாடல்களில் ஆரம்பித்து, மாநில செய்திகள் - விவிதபாரதி என்று தொடர்ந்து, இரவு ஆகாசவானி /இலங்கை தமிழ் சேவை-2 / நாடகத்தில் முடியும். 1987ல் புதிய டேப்ரிகார்டர் வாங்கும்வரை அந்த சிறிய கருப்பு ரேடியோதான் home entertainment.

டேப்ரிகார்டர் வந்தபிறகு TDK, JVC கேசட்டுகளில் விருப்பமான பாடல்களை பதிவு செய்து கேட்டது .
அதன்பின் 1994ல் அரியலூரில் Philips 2-in-1.
வேலையில் சேர்ந்தபிறகு முதல்  சம்பளத்தில் வாங்கிய sony walkman.
1997ல் அருணகிரி மாமா மூலமாக சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட AIWA VCD.
2001ல்  அமெரிக்காவிலிருந்து தம்பி அனுப்பிய sony cd walkman, பின் 2003ல் சென்னையிலிருந்து வாங்கிவந்த sony home theater.
2005 California-வில் mp3 player.
 NJ-வில் 5-வருடங்களுக்கு முன் வாங்கிய Yamaha home theater என்று, இசையை  பல பரிமாணத்தில் கேட்டாலும், Bose speaker-ல் கேட்க வேண்டும் என்று கிட்டத்தட்ட 10 வரூடங்களாக கனவு - ஆசை - ஆர்வம்.  ஆனால் அதன் விலையை பார்த்ததும் காது அடைத்துக்கொள்ளும், அதனால்  அந்த ஆர்வத்தை அவ்வப்போது ஏதாவது Bose showroom-ல் கேட்டு தனித்துக்கொள்வது.

சென்ற வாரம் அருகிலிருக்கும் Woodbury Outlet Mall சென்ற போது நல்ல discount போட்டிருந்தார்ந்தார்கள், "அட இந்த வயசுல கேட்காம வேற எந்த வயசுல கேட்கப்போற", அப்படின்னு மனசுல அசரீரி ஒலித்தது, "இப்போ இது தேவையா ?" என்று புத்தி மறுத்தது,  கடைசியில்  மனசு வென்றது . பெட்டியை வாங்கி காரில் எத்தும் போது நல்ல மழை, office-ல்
என் எதிரில் இருக்கும் ஒரு யுதர் அடிக்கடி சொல்வார் "Raining means blessing" என்று , கடவுள் வாழ்த்துகிறார் என்று அவர் மேல் பாரத்தை போட்டு, வீட்டில் வந்து அதில் "தென்மேற்கு பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும்போது சாரல்.. இன்பச்சாரல்..." என்று பாட்டை கேட்டபோது, காதில் அருவியாய் இசை ஒலித்துக்கொண்டிருக்க வெளியில் மழைச்சாரல்!.

A Bose is a Bose is a Bose.. Bose!!!

Comments

Popular posts from this blog

திருத்தறசாமி !!!

 பொறியியல் இளங்கலை இறுதியாண்டு -இயந்திரவியல், 8வது செமஸ்டர், 66% எந்த அரியர்ஸும் இல்லை - all clear.  இன்னும்  3 மாதங்களில்  Engineer!. மாமாவிற்கு தெரிந்த நண்பர்கள் வேலை  செய்யும் கம்பெனிகளில் ஏறி இறங்கி கம்பெனி ப்ராஜெக்ட் எதுவும் கிடைக்காமல் நண்பன் சடாச்சரதிற்கு தெரிந்த திருநெல்வேலி நண்பனிடமிருந்து எடுத்து வந்த ஒரு ப்ராஜெக்டை சற்று வித்தியாசமாக மாற்றி பைனல் இயர் ப்ராஜெக்டை முடிக்க பாடுபட்டுக்கொண்டிருந்தோம். மண் துகள்களை கம்பரசரிலிருந்து வரும் காற்றில் சேர்த்து  ஒரு சிறிய நாசில் மூலமாக பீச்சியடித்து கண்ணாடி மற்றும் மைக்கா ஷீட்டுகளில் துளைபோடுவது - harnessing non-conventional sources of energy, அந்த சப்ஜெக்ட் எடுக்கும் லெக்சரர்தான் எங்கள் பிராஜெக்ட் கைடு .  1995 பிப்ரவரி மாதம், முதல் வாரம்  புதன்கிழமை மதிய இடைவேளையில் நண்பர்கள் இன்று 7th செமஸ்டர் ரிசல்ட் வருகிறது என்று  பேசிக்கொண்டிருந்தார்கள். 3.30 மணி வாக்கில் காலேஜ் முடியும் நேரத்தில் டிபார்ட்மென்ட் நோட்டிஸ் போர்டில் ரிசல்ட் வெ...

Panorama பக்கம்

Amateur புகைப்படக்காரர்களுக்கு iPhone சில வேலைகளை சுலபமாக்கியுள்ளது, அதில்அருமையான ஒன்று Panoramio, சாதாரண கண் காணும் காட்சியை விட அகலமாக படம் எடுப்பது. இது புகைப்படத்திற்கும் புதிய  பரிமாணத்தை அளிக்கும். காட்சியும் புது வடிவம் பெற்று விவரமான தோற்றத்தை கொடுக்கும். நான் கிளிக்கிய சில panoramic view படங்கள் இங்கே.

ஓ.. பக்கம்

2004 நவம்பரில் ksrk எனது தம்பி மூலமாக எனக்கு அறிமுகம் , அவர் எழுத்தாளரும்கூட என்று அறிமுகம் செய்தான் . சில வருடங்கள் கழித்து அவருடைய வலைப்பதிவுகள் / கதைகள் படித்தேன் . அவருடைய வெப்ஸைட்டில் அவரின் டிவிட்டர் ஐடியைப் பார்த்து சரி நாமும் ட்விட்டரில் ஒரு கணக்குத் தொடங்குவோம் எனத்தொடங்கி பின்தொடர்ந்தேன் .  பின் ட்விட்டர் ரெகமெண்ட் செய்ய @elavasam கொத்தனாரைப் பின்தொடர்ந்தேன் . அவர் ட்விட்டுகள் ஜாலியா இருந்தது . பின் அவர் ஜாலியா தமிழ் இலக்கணம்னு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்று தெரியவந்தது . பள்ளியில் தமிழ் பாடத்தில் பல சமயம் க்ளாஸ் ஃபர்ஸ்ட் எடுத்துள்ளேன் , புலவர் மன்றத்தேர்வில் பள்ளியில் முதலாக வந்து பரிசெல்லாம் வாங்கியுள்ளேன் . பள்ளிப்படிப்பு முடிந்ததும் 1991 னோட தமிழ் இலக்கணம் , இலக்கியம் எல்லாம் விட்டுப்போய் மறந்துபோச்சு .  பதினெட்டு வருசம் கழித்து தமிழ் இலக்கணம் அதுவும் ஜாலியா கத்துக்கலாம்னு சொல்லுறாரேன்னு ஒரு ஆர்வம் வந்துடுச்சி , ஆனால் எப்படி அந்த புத்தகத்தை வாங்குறதுன்னு தெரியல . அப்ப நி...