Skip to main content

Angry Bird



சில நாட்களுக்கு முன்பு அலுவல் முடிந்து வீட்டுக்குக் கிளம்பும்போது சக நண்பர் சையதுடன் பேசிக்கொண்டே கிளம்பினேன். மழை தூரிக்கொண்டிருந்தது, car parking-ல் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று அவர், "do you know how birds use  the camouflage?" என்றார். என்னடா ஏதோ சம்பந்தம் இல்லாமல் Discovery channel பக்கம் டாபிக்கை மாத்துறாரே என்று அவரை பார்த்தேன், அருகிலிருந்த car parking இடையே போடப்பட்டிருந்த கூழாங்கற்களை நோக்கிக் கையை நீட்டினார், ஒன்றும் தெரியவில்லை. அருகில் அழைத்துச்சென்றார், ஒரு பறவை உட்கார்ந்திருந்தது தெரிந்தது, எங்களைக் கண்டதும் பறக்கவில்லை, மாறாக கோபமாக சிலிர்த்தது. பின் அவரே விளக்கினார்,"it's hatching" என்று .

மழை வலுத்ததாலும்,  மேலும் அங்கிருப்பது என்னவோ ஆஸ்பத்திரியில் அடுத்தவங்க  லேபர் ரூமை எட்டிப்பார்ப்பதுபோல் இருந்தது, அதை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமென்று காரை நோக்கி கிளம்பினேன். காரை ஸ்டார்ட் செய்து வீடு வரும்போது அதை பற்றிய சிந்தனை, கனத்த மழை பெய்தால் அது என்ன செய்யும், பறவைகள் பெரும்பாலும் மரத்தில்தானே கூடுகட்டி முட்டையிடும் இந்தப் பறவை ஏன் மனிதர்கள் நடமாடும் parking lot தரையில் கூழாங்கற்களினிடையே முட்டையை அடைகாக்கத் தேர்வு செய்தது என்றெண்ணியவாறே வீடு வந்து சேர்ந்தேன். நாளை அதை SLRல் சற்று தூரத்திலிருந்தே படம்பிடிப்போம் என கேமரா பேக்கை எடுத்து வைத்தேன்.

மறுநாள் காலை ஆபிசுக்கு வந்த போது அதுபற்றி சுத்தமாக மறந்துவிட்டேன் கேமராவையும் சேர்த்து. பிறகு வந்த சையத் அதுபற்றி ஆரம்பித்தார், நேற்று காலையில் நான் காரைவிட்டு இறங்கி வரும்போது செல்போனில் பேசிக்கொண்டே வந்தேன், அப்போது திடீரென்று அந்த பறவை என்னை பார்த்து கோபத்துடன் சிறகை விரித்தது, என்ன என்று சற்று தள்ளி உற்று கவனித்தபோது அது அங்கு முட்டை இட்டு அடைகாப்பது தெரியவந்தது, இன்றும் அதுபோல நெருங்கி அதை சினம் கொள்ளசெய்து அதை வீடியோ எடுத்து வந்துள்ளேன், நீதான் blog எழுதுவியே அதில் போடு என்று எனது iPhoneல் airdrop செய்தார்.

 பிறகு அவரிடம் "is that bird is stupid?, why does it chose that place for hatching, if someone step on its eggs what it will do?, moreover it was raining yesterday” என்று நேற்று எனக்குத் தோன்றிய டவுட்ஸை சொன்னேன். அவரும்,"no, it's a smart bird, it chose pebbles to  camouflage it's eggs from other predators and moreover it makes use of the humans walking around here as it's shield from its predators and it's feathers are water resistant rain doesn't matter".

இதுதான் பாஸிட்டிவ் திங்கிங்கோ?. எப்பொழுதும்  எதிர்பார்த்த / எதிர்பாராதத் தவறுகளை எண்ணியே software code அடித்து பழக்கப்பட்ட மூளைக்கு அது தோன்றவில்லை. அவர் பிடித்த அந்த படத்தை இங்கு பகிர்ந்துள்ளேன். மேலே உள்ள படத்தில் உள்ள மஞ்சள் வட்டத்தில் அந்த பறவையை கண்டுபிடியுங்கள் பார்ப்போம் ;-)












Comments

Popular posts from this blog

திருத்தறசாமி !!!

 பொறியியல் இளங்கலை இறுதியாண்டு -இயந்திரவியல், 8வது செமஸ்டர், 66% எந்த அரியர்ஸும் இல்லை - all clear.  இன்னும்  3 மாதங்களில்  Engineer!. மாமாவிற்கு தெரிந்த நண்பர்கள் வேலை  செய்யும் கம்பெனிகளில் ஏறி இறங்கி கம்பெனி ப்ராஜெக்ட் எதுவும் கிடைக்காமல் நண்பன் சடாச்சரதிற்கு தெரிந்த திருநெல்வேலி நண்பனிடமிருந்து எடுத்து வந்த ஒரு ப்ராஜெக்டை சற்று வித்தியாசமாக மாற்றி பைனல் இயர் ப்ராஜெக்டை முடிக்க பாடுபட்டுக்கொண்டிருந்தோம். மண் துகள்களை கம்பரசரிலிருந்து வரும் காற்றில் சேர்த்து  ஒரு சிறிய நாசில் மூலமாக பீச்சியடித்து கண்ணாடி மற்றும் மைக்கா ஷீட்டுகளில் துளைபோடுவது - harnessing non-conventional sources of energy, அந்த சப்ஜெக்ட் எடுக்கும் லெக்சரர்தான் எங்கள் பிராஜெக்ட் கைடு .  1995 பிப்ரவரி மாதம், முதல் வாரம்  புதன்கிழமை மதிய இடைவேளையில் நண்பர்கள் இன்று 7th செமஸ்டர் ரிசல்ட் வருகிறது என்று  பேசிக்கொண்டிருந்தார்கள். 3.30 மணி வாக்கில் காலேஜ் முடியும் நேரத்தில் டிபார்ட்மென்ட் நோட்டிஸ் போர்டில் ரிசல்ட் வெ...

Panorama பக்கம்

Amateur புகைப்படக்காரர்களுக்கு iPhone சில வேலைகளை சுலபமாக்கியுள்ளது, அதில்அருமையான ஒன்று Panoramio, சாதாரண கண் காணும் காட்சியை விட அகலமாக படம் எடுப்பது. இது புகைப்படத்திற்கும் புதிய  பரிமாணத்தை அளிக்கும். காட்சியும் புது வடிவம் பெற்று விவரமான தோற்றத்தை கொடுக்கும். நான் கிளிக்கிய சில panoramic view படங்கள் இங்கே.

ஓ.. பக்கம்

2004 நவம்பரில் ksrk எனது தம்பி மூலமாக எனக்கு அறிமுகம் , அவர் எழுத்தாளரும்கூட என்று அறிமுகம் செய்தான் . சில வருடங்கள் கழித்து அவருடைய வலைப்பதிவுகள் / கதைகள் படித்தேன் . அவருடைய வெப்ஸைட்டில் அவரின் டிவிட்டர் ஐடியைப் பார்த்து சரி நாமும் ட்விட்டரில் ஒரு கணக்குத் தொடங்குவோம் எனத்தொடங்கி பின்தொடர்ந்தேன் .  பின் ட்விட்டர் ரெகமெண்ட் செய்ய @elavasam கொத்தனாரைப் பின்தொடர்ந்தேன் . அவர் ட்விட்டுகள் ஜாலியா இருந்தது . பின் அவர் ஜாலியா தமிழ் இலக்கணம்னு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்று தெரியவந்தது . பள்ளியில் தமிழ் பாடத்தில் பல சமயம் க்ளாஸ் ஃபர்ஸ்ட் எடுத்துள்ளேன் , புலவர் மன்றத்தேர்வில் பள்ளியில் முதலாக வந்து பரிசெல்லாம் வாங்கியுள்ளேன் . பள்ளிப்படிப்பு முடிந்ததும் 1991 னோட தமிழ் இலக்கணம் , இலக்கியம் எல்லாம் விட்டுப்போய் மறந்துபோச்சு .  பதினெட்டு வருசம் கழித்து தமிழ் இலக்கணம் அதுவும் ஜாலியா கத்துக்கலாம்னு சொல்லுறாரேன்னு ஒரு ஆர்வம் வந்துடுச்சி , ஆனால் எப்படி அந்த புத்தகத்தை வாங்குறதுன்னு தெரியல . அப்ப நி...